ஒரு வருடம் தண்ணீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்த விஷால்!.. வெளியான ஷாக்கிங் நியூஸ்!..

Published on: March 18, 2025
---Advertisement---

Actor Vishal: தனது அப்பா தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் சுலபமாக நுழைந்தார் விஷால். இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்து சில படங்கள் வேலை செய்தார். அப்போதுதான் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்தது.

‘இந்த மூஞ்சிக்கு நடிக்கணும்னு ஆசையா?’ என அவர் காதுபடவே பலரும் பேசினார்கள். செல்லமே என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்த சண்டக்கோழி மற்றும் திமிறு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்து விஷாலை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது. அதன்பின் பல படங்களிலும் நடித்துவிட்டார்.

சில படங்களுக்கு அவரே தயாரிப்பாளராகவும் இருந்தார். கடந்த பல வருடங்களாகவே அவருக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. பல வருடங்கள் கழித்து வெளியான மார்க் ஆண்டனி படம் மட்டுமே ஹிட் அடித்தது. அதேநேரம் லத்தி உள்ளிட்ட படங்கள் ஓடாததால் பல கோடி கடனாளியாக மாறினார் விஷால்.

இந்நிலையில்தான் அவர் 10 வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜராஜா திரைப்படம் வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் கலந்துகொண்ட விஷாலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், மைக்கை கூட பிடிக்க முடியாமல் கை நடுங்கி, பேச முடியால் திணறினார். ‘விஷாலுக்கு என்னாச்சி?’ என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.

பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் ஒன்றைக்கண் வைத்து நடித்ததில் அவருக்கு ஒற்றைத்தலைவலி ஏற்பட்டு அதை தாங்கமுடியாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அதுவே அவரின் உடல் நிலையை பாதித்துவிட்டது என சிலர் சொன்னார்கள். சிலரோ, அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர் சி ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘மதகஜராஜா படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக விஷாலை 8 பேக் வைக்க சொன்னேன். அவரும் 8 பேக்குடன் வந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த காட்சியை எடுக்க ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த ஒரு வருடமும் 8 பேக்கை மெயிண்டெயின் பண்ண அவர் சரியாக சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே குடித்து கஷ்டப்பட்டார்’ என சொல்லியிருக்கிறார்.

தற்போது விஷாலை சரி செய்ய நடிகர் ஆர்யா உள்ளிட்ட அவரின் நண்பர்கள் களமிறங்கியுள்ளனர். விரைவில் விஷால் குணமடைந்து வரவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment