நான் போனதிலேயே பெஸ்ட் டேட்டிங் அதுதான்!.. பல நாள் ரகசியத்தை பகிர்ந்து நிவேதா பெத்துராஜ்...
மதுரையை சேர்ந்தவர் நிவேதா பெத்துராஜ் 10 வயது வரைக்கும் கோவில்பட்டியில் படித்தவர் இவர். நிவேதாவுக்கு 11 வயது இருக்கும்போது அவரின் குடும்பம் துபாய்க்கு குடி பெயர்ந்தது. துபாயில் 10 வருடம் இருந்தார் நிவேதா. டிகிரி படித்ததும் அங்குதான். அதன்பின் மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். சிலவற்றில் டாப் 5 அழகிகளில் பட்டியலில் இருந்தார். அதன்பின் ஒரு நாள் ஒரு கூத்து என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரின் அப்பா தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினர். அதன்பின் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்தார்.
மேலும் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழை விட அதிக தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். உதயநிதியுடன் கிசுகிசுக்கப்பட்டவர் இவர். துபாயில் இவருக்கு உதயநிதி வீடு வாங்கி கொடுத்திருப்பதாக சிலர் சொன்னார்கள்.
ஆனால், அப்படி எதுவுமில்லை. எனக்கு அங்கு வீடு இல்லை என விளக்க கொடுத்தார் நிவேதா. நடிகை, மாடல் அழகி என வலம் வரும் நிவேதா கட்டழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைப்பவர். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த படங்கள் வைரலாவதுண்டு.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அவரிடம் டேட்டிங் அனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன நிவேதா ‘இதுவரைக்கும் நான் போனதிலேயே பெஸ்ட் டேட்டிங் என்றால் அது துபாயில்தான். ஆனால், அது வொர்க் அவுட் ஆகவில்லை.
ஆனால், செம ஜாலியாக இருந்தது. அதன்பின் இரண்டு பேருடன் டேட்டிங் போனேன். ஆனால், அது செட்டே ஆகவில்லை. எப்படியாவது அங்கே இருந்து கிளம்பினால் போதும் என நினைத்தேன். அந்த ரெண்டு டேட்டிங் செம வொர்ஸ்ட்’ என சொல்லி இருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.