Connect with us

அஜித்தின் லிஸ்டில் இணைந்த 2 இயக்குனர்கள்..! இது மட்டும் நடந்தா படமே வேற லெவல்தான்..!

latest news

அஜித்தின் லிஸ்டில் இணைந்த 2 இயக்குனர்கள்..! இது மட்டும் நடந்தா படமே வேற லெவல்தான்..!

Actor Ajith: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் இருப்பவர்கள் விஜய் அஜித். இவர்கள் இருவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடுவார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இருவருக்கும் சரிசமமாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் அஜித் மற்றும் விஜய்யை வைத்து படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் போட்டி போடுவது வழக்கம் தான். பொதுவாக ஆண்டுக்கு ஒரு படம் ஆவது இவர்களின் நடிப்பில் வெளியாகிவிடும். ஆனால் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படங்களும் வெளியாகவில்லை. பிறகு கடந்த பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.

விடாமுயற்சி திரைப்படம்: மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இரண்டு வருடங்களாக எடுத்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் படம் வெளியானாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி வருகிறார்கள். தொடர்ந்து வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படத்தின் வசூலிலும் தொய்வு ஏற்பட்டு இருக்கின்றது. இருப்பினும் அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

போட்டி போடும் இயக்குனர்: நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் கலந்து கொண்டு வருகின்றார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் பங்குபெற்று மூன்றாம் பரிசை பெற்றிருந்த நிலையில் தற்போது போர்ச்சுக்களில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கு பெற்று வருகின்றார். இந்த வருடத்தில் 9 மாதங்கள் எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தை வைத்து அடுத்ததாக யார் படம் இயக்கப் போகின்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே விஷ்ணுவர்தன் பெயர் அடிபட்டு வரும் நிலையில் வெங்கட் பிரபுவும் ஒரு துண்டு போட்டு வைத்திருக்கின்றார். இது இல்லாமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

இவர்கள் மூவரில் யாராவது ஒருவர் தான் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கப் போகிறார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மற்றொரு அப்டேட் வந்துள்ளது. அதாவது மகாராஜா திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் ஒருமுறை அதித்தை சந்திக்கும் வாய்ப்பை பெற்றாராம்.

அப்போது அவரிடம் ஒரு லைன் கூறி இருப்பதாகவும், இதனால் அஜித்தின் லிஸ்டில் அவரும் இணைந்து இருப்பதாக கூறப்படுகின்றது. இது இல்லாமல் போர்த் தொழில் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவும் அஜித்தின் லிஸ்டில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த 5 பேரில் யார் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போகிறார் என்பது குட் பேட் அக்லி படம் வெளியான பின்னரே தெரியவரும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top