ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுக்கும் செம ட்ரீட்!.. ரெடியா இரு மாமே!...

by சிவா |
ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுக்கும் செம ட்ரீட்!.. ரெடியா இரு மாமே!...
X

Good Bad Ugly: அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. அவருக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவரோடு தொடந்து பயணிப்பார். வீரம் படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். அந்த படம் ஹிட். எனவே, தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 3 படங்களில் நடித்தார். அதாவது தொடந்து சிவாவின் இயக்கத்தில் 4 திரைப்படங்களில் நடித்தார்.

அதேபோல், ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவே ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் வலிமை, துணிவு என இரண்டு படங்களில் நடித்தார். அதாவது ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் குறைந்தபட்சம் அவரின் இயக்கத்தில் 3 படங்களில் நடிப்பார் அஜித்.

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். அவரின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக அஜித் அவருக்கு வாக்குறுதியும் அளித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. எனவே, என்ன நடக்கும் என தெரியவில்லை. ஒருபக்கம், விடாமுயற்சி படம் 90 சதவீதம் முடிந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்தார்.

இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. அஜித் ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே குட் பேட் அக்லி பட டீசரில் இடம் பெற்றிருந்தது. எனவே, கண்டிப்பாக இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

குட் பேட் அக்லி டீசர் வீடியோயை யுடியூப்பில் 3.5 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இது அஜித்துக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே, குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்துவிட்டால் கண்டிப்பாக உனது இயக்கத்தில் இன்னொரு படம் நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்துள்ளாராம். எனவே, ஆதிக் ரவிச்சந்திரன் செம ஹேப்பியாக இருக்கிறாராம்.

சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் வரிசையில் ஆதிக் ரவிச்சந்திரனும் இடம் பிடிப்பார் என்றே கணிக்கப்படுகிறது. குட் பேட் அக்லி படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். எனவே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்தடுத்து நடிப்பார் என்றே எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க தனுஷும் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story