குட் பேட் அக்லி சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாதா?.. எல்லாத்துக்கும் காரணம் இந்த படம்தானா?..

Actor Ajith: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திற்கு இணையாக அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் அஜித் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார். விடாமுயற்சி திரைப்படத்தின் காலதாமதம் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் அஜித் கமிட்டாகி இருந்தார்.
இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. தமிழில் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். படம் ஆரம்பித்த வேகத்திலேயே விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் முழுவதுமாக எடுத்து முடிக்கப்பட்டது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முதலில் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் வருகையின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருந்தார்கள். அதன்படி குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால் தற்போது இந்த திரைப்படம் அந்த தேதியில் வெளியாகுமா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. அதற்கு காரணம் சன்னி லியோன் நடித்திருக்கும் ஜாத் என்கின்ற திரைப்படம் தான் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சன்னி லியோன் நடித்திருக்கும் திரைப்படம் ஜாத்.
இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் கோபிசந்த் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகின்றார். இப்படத்தில் நடிகை ரெஜினா, சயாமி கெர் மற்றும் ரந்தீப் ஹுடா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கின்றது.
இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இன்று இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது.
மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படமும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாவதால் நிச்சயம் குட் பேட் அக்லி திரைப்படம் நிச்சயம் தள்ளி போகும் என்று கூறப்படுகின்றது. இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் தாங்கள் தயாரித்த இரண்டு திரைப்படங்களை ஒரே தேதியில் வெளியிட்டது கிடையாது.
அப்படி இருக்கையில் நிச்சயம் குட் பேட் அக்லி திரைப்படம் தான் ஏப்ரல் பத்தாம் தேதியில் இருந்து தள்ளிப் போவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள். ஒருவேளை படம் தள்ளி போகின்றதா? அல்லது சொன்ன தேதியிலேயே ரிலீஸ் ஆகப்போகின்றதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.