Amaran: உலகம் முழுக்க அமரன் படத்தின் 7வது நாள் வசூல் இத்தனை கோடியா?

by ராம் சுதன் |

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ் நடித்த அமரன் படம் இந்த ஆண்டில் வெளியான 4 பெரிய படங்களில் ஒன்று. கோட், வேட்டையன், இந்தியன் 2 படங்களைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஓபனிங்கில் பெற்ற படம் என்றால் அது அமரன் தான். உலகநாயகன் கமல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம்.

சிவகார்த்திகேயனின் திரை உலக வரலாற்றில் மறக்க முடியாத படம். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே நேர்த்தியாக எடுத்துள்ளார்கள். சாதீய ரீதியாக சர்ச்சை வந்த போதும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி திறம்பட சமாளித்தார்.

இந்தப் படத்திற்காக 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளார். அதற்குப் பிரதிபலன் தான் படத்தின் மாபெரும் வெற்றி. படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸாகவும் அருமையாக நடித்துள்ளனர்.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக சாய்பல்லவியும் தன் கதாபாத்திரத்தின் சிறப்பை உணர்ந்து அருமையாக நடித்துள்ளார். பல்வேறு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அந்தவகையில் படத்தின் வசூல் உலகம் முழுவதும் 200 கோடியை நெருங்கி வருகிறது.

6வது நாளில் 170 கோடியை நெருங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் 110 கோடியை வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று 7வது நாள் மட்டும் என்ன வசூல்னு பாருங்க.

உலகெங்கிலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் 7வது நாள் 9 முதல் 10 கோடி வரை வசூலித்துள்ளது. மொத்தத்தில் 170 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் இப்படி ஒரு ஆக்ஷன் படத்தில் இதுவரை நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரது மார்க்கெட் இன்னும் உச்சத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story