Amaran: அமரன் படத்துக்கு ராஜ்குமார் பெரியசாமி வாங்கிய சம்பளம் இவ்வளவு கோடியா?!...
Rajkumar periyasamy: தீபாவளி பண்டிகைக்கு வெளியான 'அமரன்' வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக இருந்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை. ராஜ்கமல் தயாரிப்பில் உருவான இப்படம் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் கொடுத்த கால்ஷீட்டை விட அதிக நாட்கள் கேட்பதாக சிவகார்த்திகேயன் சலித்து கொண்டதாகவும் கூறப்பட்டது. அதோடு ஆரம்ப கட்டத்தில் 'அமரன்' என தலைப்பு வைத்ததால் குறிப்பிட்ட சாதியினரை தூக்கி பிடிப்பதாக ரசிகர்களும் புகார் கூறினர்.
சொல்லப்போனால் படம் வெளியாவதற்கு முன் இவ்வளவு ஹைப் இல்லை. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் துணிந்து தீபாவளிக்கு 'அமரன்' படத்தை வெளியிட்டனர். கிளைமேக்ஸ் தெரிந்த காட்சிதான் என்றாலும் பேமிலி ஆடியன்ஸ் இப்படத்திற்கு சப்போர்ட் செய்ய தற்போது பாக்ஸ் ஆபிசில் படம் தறிகெட்டு ஓடுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார் என்றால், சாய் பல்லவி படத்தை தூணாக இருந்து தாங்கியிருக்கிறார். அவரின் நடிப்பினை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சொல்லப்போனால் அவரின் நடிப்பினால் 'அமரன்' மெருகேறி இருக்கிறது என்பதுதான் நிஜம்.
இந்தநிலையில் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில் சுமார் 6 கோடி ரூபாயை அவர் 'அமரன்' படத்திற்காக பெற்று இருக்கிறார். தற்போது படம் ஹிட் அடித்து இருப்பதால் அடுத்து இயக்கப்போகும் தனுஷ் படத்துக்கு அவரின் சம்பளம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.