Amaran BoxOffice: சிவகார்த்திகேயன் ஹிஸ்ட்ரியில் இது முதன் முறை!.. 3 நாட்களில் அமரன் செய்த சாதனை!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 10:59:51  )
Amaran BoxOffice: சிவகார்த்திகேயன் ஹிஸ்ட்ரியில் இது முதன் முறை!.. 3 நாட்களில் அமரன் செய்த சாதனை!..
X

Amaran: கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த முகுந்த் வரதராஜன் பற்றிய கதை.

தமிழகத்தை சேர்ந்த முகுந்த் வரதராஜனுக்கு இராணுவத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது?. ராணுவத்தில் அவர் என்னென்ன பணிகளை திறம்பட செய்தார்?.. தீவிரவாதிகளை எப்படி களையெடுத்தார்?.. தீவிரவாதிகளை சுட்டு கொல்லும் ஆபரேஷனில் அவர் எப்படி இறந்து போனார்?, அவரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை என எல்லாமே அமரன் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு நிஜ ராணுவ வீரரின் கதை என்பதால் அதை புரிந்துகொண்டு முழு அர்ப்பணிப்புடன் இப்படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் சாய் பல்லவி. தீபாவளிக்கு வெளியான படத்திலேயே இந்த படத்திற்குதான் அதிக வரவேற்பு இருந்தது.

எனவே, இப்படத்திற்கு ஆன்லைன் முன்பதிவுகள் சிறப்பாக இருந்தது. அதோடு, வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. எனவே, தொடக்கம் முதலே இப்படம் நல்ல வசூலை பெற்றது. ஒருபக்கம் படம் பார்த்த பலரும் சமூகவலைத்தளங்களில் இப்படத்தை பாராட்டி எழுதி வந்தனர்.

நடிகர் ரஜினி இப்படத்தை பார்த்துவிட்டு படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, இப்படம் பற்றி பாராட்டி பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார். படம் வெளியான 2 நாட்களில் இப்படம் 43 கோடியை வசூல் செய்தாக ராஜ்கமல் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்களில் அமரன் 100 கோடி வசூலை தொட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 25 நாட்களில் 100 கோடி வசூல் செய்தது, டான் படம் 12 நாட்களில் 100 கோடியை தொட்டது. ஆனால், அமரன் படம் 3 நாட்களில் 100 கோடி வசூலை தொட்டு சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும், 3 நாட்களுக்கான வசூலை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story