பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய அமரன்... மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ..

அமரன் திரைப்படம்:
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகூர்த்த வரதராஜ் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.
படத்தின் பட்ஜெட்:
கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை 110 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இதில் படத்தின் ப்ரொடக்ஷன் செலவு 40 கோடி, ஆர்டிஸ்ட் மட்டும் டெக்னீசியன் சம்பளம் 40 கோடி, ப்ரொமோஷன் செலவு 7 கோடி மற்றும் இன்ட்ரஸ்ட் 20 கோடி, படம் வெளியீட்டு செலவு 3 கோடி ஆகும்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு 20 கோடி சம்பளம், சாய்பல்லவிக்கு 2 கோடி சம்பளம், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராகுல் போஸ்க்கு 50 லட்சம், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு 2 கோடி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு 3. 5 கோடி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் அனைவருக்கும் சேர்த்து மொத்தம் 12 கோடி என்று 40 கோடி செலவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை பல ஏரியாக்களில் ராஜ் கமல் ஃபிலிம் தனியாகவே வெளியீடு செய்திருந்தது. முக்கியமாக தமிழ்நாட்டில் ரெட் ஜெயின்ட் நிறுவனம் மூலமாக இந்த படத்தை வெளியிட்டு இருந்தார்கள். இந்த படத்தின் பிரீரிலீஸ் பொறுத்த வரையில் வந்த வருமானம் ஒவ்வொரு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. கேரளா திரையரங்குகள் மூலமாக 2 கோடி, கர்நாடகா மூலமாக 2 கோடி, தெலுங்கானா மூலமாக 4 கோடி, வெளிநாடுகளில் 20 கோடி ரூபாய். இதுவே அமரன் படத்துக்கு ஃப்ரீ ரிலீஸ் மூலமாக வந்த வருவாய்.
அமரன் படத்தின் சாட்டிலைட் வருவாய் பொறுத்த வரையில் விஜய் டிவி நிறுவனம் 24 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கின்றது. netflix நிறுவனம் 55 கோடி கொடுத்து வாங்கி இருக்கின்றது. ஆடியோ ரைட்சை 10 கோடி ரூபாய்க்கு சரிகம நிறுவனம் வாங்கியிருக்கின்றது. அமரன் படத்திற்கு சாட்டிலைட் மூலமாக 117 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ப்ரீ ரிலீஸ் மூலமாக அமரன் திரைப்படம் 7 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் 400 திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி ஆறு வாரங்களான நிலையில் தற்போது வரை 200 திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த திரைப்படம் முதல் நாள் வசூலை பொருத்தவரையில் தமிழகத்தில் மட்டும் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் சேர்த்து 35.31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஒரு வாரத்தில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 84.76 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தற்போது வரை அமரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 155 கோடி வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் ஷேராக இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த தொகை என்பது சிவகார்த்திகேயன் கெரியரிலேயே மிகப்பெரிய தொகையாக பார்க்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஷேர் கிடைத்த திரைப்படம் என்றால் அமரன் திரைப்படம் தான்.
கேரளா மொத்த வசூல் 15 கோடி - ஷேர் 7 கோடி ரூபாய்
கர்நாடகா மொத்த வசூல் 27 கோடி - ஷேர் 8 கோடி ரூபாய்
ஆந்திரா மொத்த வசூல் 49 கோடி - ஷேர் 22 கோடி
வட இந்தியாவில் மொத்த வசூல் 10 கோடி- ஷேர் 5 கோடி
ஓவர்சீஸ் மொத்த வசூல் 105 கோடி - ஷேர் 40 கோடி
இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு திரையரங்குகள் மூலமாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் மட்டுமே 105.40 கோடி ரூபாய் ஆகும். மொத்தத்தில் அமரன் திரைப்படம் உலக அளவில் தற்போது வரை 361 கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்திருக்கின்றது.