முழுக்க முழுக்கக் கூஸ்பம்ப்ஸ் தான்... அமரன் டிரெய்லர்... போட்டுத் தாக்கிட்டாரே SK.!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:11  )

இன்று மாலை அமரன் டிரெய்லர் வெளியானது. என்ன ஒரு அர்ப்பணிப்பு என்று சொல்லும் அளவுக்கு சிவகார்த்திகேயனும், சாய்பல்லவியும் நடித்து அசத்தியுள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி அருமையாக இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லரைப் பார்த்த நெட்டிசன்கள் எல்லாரும் எப்டிஎப்எஸ்க்காக வெயிட்டிங்னு கமெண்ட் போட்டுருக்காங்க.

டிவி ஆங்கராக இருந்து மிமிக்ரி, கேரக்டர் ஆர்டிஸ்ட், ஹீரோ கம் காமெடி என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த எஸ்.கே. இப்போது ஆக்ஷன் பக்கமும் திரும்பி அதிரடி காட்டியுள்ளார். உண்மையிலேயே அர்ப்பணிப்பு நன்றாகத் தெரிகிறது. ராணுவ உடையில் கனகச்சிதமாக மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

'திஸ் இஸ் தி ஃபேஸ் ஆப் இண்டியன் ஆர்மி'ன்னு சொல்வதில் இருந்து எந்தளவுக்கு சிவகார்த்திகேயன் உண்மையான நாட்டுப்பற்றுடன் படத்தில் வாழ்ந்துள்ளார் என்பது தெரிகிறது.

'ஆர்மி வெறும் ஜாப் இல்ல. லைஃப்' என்கிறார் SK. ஆவேசத்துடன் தீவிரவாதிகளுடன் மோதுகிறார். தாயின் பிரியா விடை பாசம் நெஞ்சைப் பதற வைக்கிறது. இப்படி உணர்வுப்பூர்வமான டிரெய்லரைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சொல்வது இதுதான். முழுக்க முழுக்கக் கூஸ்பம்ப்ஸ் தான். டிரெய்லர்ல தெறிக்க விடுறீங்கன்னு எல்லாம் கமெண்ட் கொடுத்திருக்காங்க.

மேஜர் முகுந்த் வரதராஜனுக்குப் பெருமை சேர்த்துள்ள படம். கமல் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பிஜிஎம் தெறிக்க விடுகிறது.

'அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே' என்ற பாரதியார் பாடலுடன் தொடங்குகிறது டிரெய்லர். பாப்பாவுக்கு சிவகார்த்திகேயன் பாடல் சொல்லி தைரியம் ஊட்டி வளர்க்கிறார்.

சாய்பல்லவி ரெபோக்காவாக அருமையாக நடித்துள்ளார். 'அப்பா வருவாங்களாம்மா'ன்னு அந்தப் பாப்பா பர்த்டே கேக் வெட்டிக்கொண்டே கேட்கும்போது மனம் கனக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் அவரது திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவே அமையும் என்று நம்பலாம். ஏன்னா இப்படி ஒரு ஆக்ஷன் படம் அவருடைய திரையுலக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்.

Next Story