இந்த தமிழ் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாட வேண்டியது! ஏஆர் ரஹ்மான் சொன்ன சூப்பர் தகவல்
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ரோஜா படத்தின் மூலம் இந்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதுவரை இளையராஜா என்ற ஒற்றை மனிதர் இந்த கோலிவுட்டை ஆட்சி செய்து வந்தார். முதல் படத்திலேயே பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் ஏஆர் ரஹ்மான். யாருப்பா இந்த பையன்? என்று கேட்கும் அளவுக்கு ரோஜா படத்தின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் ரஹ்மான்.
இந்தியாவில் இருந்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்தார் ரஹ்மான். இன்று பெரிய பெரிய முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றியடைந்ததற்கு கதை ஒரு காரணமாக இருந்தாலும் ரஹ்மான் இசையில் அமைந்த பாடலும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனை பற்றி ரஹ்மான் பேசிய ஒரு தகவல் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. மைக்கேல் ஜாக்சனும் ரஹ்மானும் சந்தித்து கொண்ட புகைப்படம் அந்த நேரத்தில் மிகவும் வைரலானது. அந்த சமயம் ரஹ்மான் எந்திரன் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தாராம்.
மைக்கேல் ஜாக்சனை சந்தித்த விஷயம் ஷங்கருக்கு தெரியவந்ததும் ரஹ்மானிடம் ஷங்கர் ‘ நீங்கள் மைக்கேல் ஜாக்சனை பார்த்தீர்களா? எந்திரன் படத்தின் கடைசி பாடலை நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாடினால் நன்றாக இருக்கும்’ என கூறினார். அதுமட்டுமில்லாமல் மைக்கேல் ஜாக்சனிடமும் இதை பற்றி கேளுங்கள் என கூறினாராம்.
அதன் பின் மைக்கேல் ஜாக்சனை சந்திக்கும் வாய்ப்பு ரஹ்மானுக்கு கிடைக்க இதை பற்றி கேட்டாராம் ரஹ்மான். அதற்கு மைக்கேல் ஜாக்சன் ‘ நீங்கள் என்ன சொன்னாலும் சரி’ என கூறினாராம். அதனால் இதை பற்றி இரண்டு பேரும் ஆலோசனை செய்ய ஒரு சமயம் கச்சேரிக்காக வெளி நாடு செல்ல இருந்ததாம் மைக்கேல் ஜாக்சன்.
வந்த பிறகு எந்திரன் படத்தில் சேர்ந்து பணியாற்ற இருந்தார்களாம். ஆனால் போன இடத்தில்தான் மைக்கேல் ஜாக்சன் இறந்து விட்டார் என்று ரஹ்மான் கூறினார். அதுமட்டுமில்லாமல் ஒரு 10 வருடம் மைக்கேல் ஜாக்சன் சில கொடுமைகளை அனுபவித்ததாகவும் அதைப்பற்றி நான் ஒரு ஆல்பம் தயாரித்ததாகவும் முடிந்தால் ஏஐ மூலம் மைக்கேல் ஜாக்சனை மீண்டும் கொண்டு வந்து அந்த ஆல்பத்தை வெளியிடுவேன் என ரஹ்மான் கூறினார்.