Bigg boss Tamil: எல்லா தப்பும் பண்ணிட்டு.... இப்படி சொல்றது நியாயமா? ஜாக்குலினை வெளுத்து வாங்கிய விஜய்சேதுபதி
பிக்பாஸ் சீசன்களில் கமல் 'ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது' என்று நடத்தினார். இப்போ விஜய் சேதுபதி 'ஆளும் புதுசு. ஆட்டமும் புதுசு'ன்னு அசத்துகிறார். போட்டியாளர்களைக் கேள்வி கேட்கிறார். அவர்கள் சொல்லும் பதிலில் இருந்து திரும்பவும் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறார் விஜய் சேதுபதி. கடைசியில் அவர்கள் மேல் உள்ள தப்பை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் இதுவரை குறும்படம் மட்டும் வரவில்லை.
பிக்பாஸ் சீசன் 8 இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. வீட்டில் நடந்து வரும் பிரச்சனை அனைவரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது.
கடந்த வாரம் நடந்த சாப்பாட்டுப் பிரச்சனை நேற்று விஜய்சேதுபதி அலசோ அலசுன்னு அலசிவிட்டார். சாச்சனா நமிதாஸ், தர்ஷாகுப்தா, சுனிதா, ஸ்ரீசத்யா, ஆர்ஜே.ஆனந்தி, பவித்ரா, தர்ஷிகா, அன்ஷிதா, சௌந்தர்யா, ஜாக்குலின் என பெண் போட்டியாளர்களும், ரவீந்தர் சந்திரசேகர், தீபக், ரஞ்சித், கானா ஜெப்ரி, அர்னவ், விஜே விஷால், முத்துக்குமரன், அருண்பிரசாத் என ஆண் போட்டியாளர்களும் என 18 பேர் வீட்டில் இருப்பதால் களைகட்டுகின்றனர். இவர்களில் சாச்சனா எலிமினேட் ஆகிவிட்டார். திரும்பவும் வந்தார். முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேட் ஆகிவிட்டார்.
பிக்பாஸ் கொடுக்குற டாஸ்க்கில் நல்லா விளையாடுறவங்க தான் கடைசி வரைக்கும் நிலைச்சி நிற்பாங்க. அது அறிவிலும் சரி. டீம் ஒற்றுமையிலும் சரி. சிறந்து விளங்க வேண்டும். பெண்கள் அணி ஜெயித்த போது ஜாக்குலினைக் காப்பாற்றி விட்டாங்க.
அதன்பிறகு சாப்பாட்டு பிரச்சனைக்கு தர்ஷா திரும்ப திரும்ப கேட்பது ஒரு மாதிரியாக இருக்குதுன்னு சொல்லவும் அதற்கு விஜய்சேதுபதி உங்க உரிமை தானே. இங்க விளையாடத் தான் வந்துருக்கீங்க. அதனால உங்க உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாதுன்னு அருமையான தீர்ப்பை வழங்கினார்.
இன்று நடக்கும் எபிசோட்டிற்கான புரொமோ வெளியானது. இதுல ஜாக்குலினை வெளுத்து வாங்குகிறார் விஜய்சேதுபதி. காலையில இருந்து என் மேல தான் தொடர்ந்து தப்பு சொல்றாங்கன்னு சொல்கிறார் ஜாக்குலின்.
அதற்கு விஜய் சேதுபதி பதில் சொல்வது இதுதான். எல்லா தவறையும் நீங்களே பண்ணிட்டு மனிதாபிமானத்தோட நடந்துக்கோங்க. நான் ரூல்ஸை பிரேக் பண்ணுவேன்னு சொன்னா உங்க மேல தான தப்புன்னு ஜாக்குலினைப் பார்த்து கேட்டு விஜய் சேதுபதி வெளுத்து வாங்கிவிட்டார். ஏற்கனவே ஜாக்குலின் விஜய்சேதுபதியிடம் ஒருமுறை பல்பு வாங்கியுள்ளார். அப்படின்னா இன்னைக்கு பிக்பாஸ் சீசன் களைகட்டும் என்பதே உண்மை.