குரூப்ல டூப்பு!.. சிவகார்த்திகேயனை விடாமல் சீண்டும் புளூசட்ட மாறன்... முடியல!...
Sivakarthikeyan: யுடியூப் விமர்சகர் என்கிற பெயரில் தமிழ் சினிமாவை கலாய்த்து வருபவர்தான் புளூசட்ட மாறன். இவருக்கு கலை படங்கள் மட்டுமே பிடிக்கும். லாஜிக் இல்லாத கமர்ஷியல் மசாலா படங்களையும், பில்டப் செய்யும் ஹீரோக்களையும் பிடிக்கவே பிடிக்காது. எனவே, அவர்களை கிண்டலடிப்பார்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோரை கடுமையாக நக்கலடித்து வருபவர் இவர். இது அவரின் டிவிட்டர் பக்கத்தை பார்த்தாலே தெரியும். தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தையும் இஷ்டத்துக்கும் நக்கலடித்து பேசினார். 'இந்த படத்திற்கு ராயன் என பெயர் வைத்ததை விட குத்தூசி கோவிந்தன் என பெயர் வைத்திருக்கலாம்' என சொன்னார்.
வலிமை படம் வந்த போது 'அஜித் பஜன்லால் சேட் போல இருக்கிறார்' என உருவக்கேலியும் செய்தார். லியோ, வாரிசு என ஒன்றையும் அவர் விடவில்லை. கோட பட பாடலில் டி ஏஜிங் செய்கிறேன் என்கிற பெயரில் விஜயை வெங்கட்பிரபு காட்டி இருந்த விதத்தையும் செமயாக நக்கலடித்து பதிவுகள் போட்டார்.
ரஜினியை இவரை போல நக்கலடித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. தலீவர்.. தலீவர் என்று சொல்லியே வச்சு செய்வார். இமான் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் சிக்கியபோது ஒரு வாரத்திற்கு அவரை ஊரப்போட்டு அடித்தார். இவரின் விமர்சனமும், பேச்சும் திரையுலகில் பலருக்கும் பிடிக்காது.
குறிப்பாக இயக்குனர்களுக்கு. இவர் மீது சில இயக்குனர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவங்களெல்லாம் நடந்திருக்கிறது. இவரின் யுடியூப் சேனலை பல லட்சம் பேர் பார்க்கிறார்கள். இந்நிலையில், ‘குரூப்ல டூப்பு’ என கேப்ஷன் கொடுத்து ‘எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத நடிகர்கள்’ என ஒருவர் பதிவிட்டிருந்ததை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், சிவக்குமார், ராமராஜன், டி ராஜேந்தர், ஆனந்தராஜ், கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது. குரூப்ல டூப்பு என அவர் சிவகார்த்திகேயனையே சொல்கிறார் என விளக்கம் கொடுக்க தேவையில்லை. இமான் விஷயத்தில் எஸ்.கே. சிக்கியதையே மாறன் இப்படி பதிவிட்டிருக்கிறார் என புரிந்து கொள்ளலாம்.