செலவோ 45 கோடி… வசூல் 66 ஆயிரம்… மண்ணை கவ்விய வாரிசு நடிகரின் திரைப்படம்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:31  )

சினிமா ரசிகர்கள் முன்பெல்லாம் படத்தின் கதையை மட்டுமே பார்த்து அது நல்ல படமா இல்லை தோல்வி படமா என முடிவெடுத்து விடுவார்கள். ஒரு சில பிரபல நடிகர்களின் முகம் தெரிந்தாலே அந்த படமும் வெற்றி படமாக அமையும். ஆனால் இப்போது நடக்கும் கதைகளை வேறு.

சாதாரண ரசிகர்கள் கூட ஒரு படத்தின் வசூல் எவ்வளவு வந்தது அப்படத்தின் பட்ஜெட் என்ன உள்ளிட்ட பல விஷயங்களையும் ஆராய்ந்து தெரிந்து கொள்கின்றனர். இதனால் சமீபத்திய காலமாக முக்கிய படங்களின் வசூல் விபரங்கள் அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் சில முன்னணி பிரபலங்கள் திரைப்படங்கள் பட்ஜெட்டை விட சில கோடிகள் வசூலை குவித்து வெற்றி படமாக அமையும். அது மட்டுமல்லாமல் சில சின்ன பட்ஜெட் திரைப்படங்களும் நல்ல கதையை கொண்டு 100 கோடி வரை வசூல் செய்ததையும் பார்க்க முடிகிறது.

ஆனால் பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படம் கோடிகளில் செலவு செய்து லட்சங்களை கூட தொடாத வசூலை பார்த்து திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரில் மகன்தான் அர்ஜுன் கபூர்.

இவர் பாலிவுட்டில் 2 ஸ்டேட்ஸ் திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகராக மாறி இருந்தார். தொடர்ச்சியாக இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பாலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வருகிறார் அர்ஜுன் கபூர். தற்போது சிங்கம் ஆகைன் திரைப்படத்தில் அர்ஜுன் கபூர் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு முந்தைய திரைப்படமாக தி லேடி கில்லர் திரைப்படத்தில் அர்ஜுன் கபூர் நடித்திருந்தார். பூமி பெட்நேக்கருடன் ஜோடி போட்டு கிரைம் திரில்லர் படமாக இது வெளியானது. 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படத்திற்கு மிக மோசமான விமர்சனங்கள் குவிந்தது. வசூல் வெறும் 66 ஆயிரம் மட்டுமே குவிக்க பாலிவுட் திரையுலகை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வரவேற்பால் ஓடிடி நிறுவனங்களும் இப்படத்தை வெளியிட கைவிட்டது.

இதனால் இந்த ஓடிடி நிறுவனங்களும் வராத நிலையில் யூடியூபில் இப்படத்தை இலவசமாக வெளியிட்டனர். ஆனால் அதிலும் புகுந்த திரைப்பட ரசிகர்கள் இதெல்லாம் ஒரு படமா என்ற ரீதியில் மோசமாக விமர்சித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

Next Story