Connect with us

Cinema News

கோட் படத்த 4 தடவ பார்த்தேன்.. ஆனா விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்!.. கோபத்தில் பொங்கிய நடிகர்!…

விஜயின் அரசியல் எண்ட்ரி குறித்து பிரபல நடிகர் கருத்து கூறியுள்ளார்.

Tamilaga vetrik kalagam: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஜய். அப்பா எஸ்.ஏ.சி மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருக்கேற்றிக்கொண்டவர். சிறந்த கதை, சிறந்த நடிப்பு, வித்தியாசமான தோற்றம் என்றெல்லாம் யோசிக்காமல் ஜாலியான காதல், செண்டிமெண்ட், காமெடி, சண்டை காட்சிகள், நடனம் என ஸ்கோர் செய்தார்.

பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, கில்லி என ஹிட் படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். விஜயை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் காத்திருந்தார்கள். சமீபகாலமாகவே விஜயின் படங்கள் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இப்போது 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். விஜய்தான் சூப்பர்ஸ்டார் என ஒரு கூட்டம் கிளம்பும் அளவுக்கும் அவரின் வளர்ச்சி இருக்கிறது. அப்போதுதான் திடீரென அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்து கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.

2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என அவர் சொல்லி இருக்கிறார். இதற்கிடையில் வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஒரு பிரமமாண்ட மாநாட்டை நடத்துகிறார் விஜய். இதில், விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஒருபக்கம் விஜயும் மாநாட்டு வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார். ஒருபக்கம், விஜய் நினைப்பது அரசியலில் நடக்காது. விரைவில் அவர் சினிமாவுக்கு வந்துவிடுவார் எனவும் சிலர் பேசுகிறார்கள்.

இந்நிலையில், திமுக ஆதரவாளரும் நடிகருமான போஸ் வெங்கட் விஜயின் மாநாடு பற்றி கருத்து சொன்னபோது ‘கோட் படத்தை குடும்பத்துடன் 4 முறை பார்த்தோம். அவர் மாதிரி ஹீரோ இங்கே யாருமில்லை. ஆனால், அவருக்கு ஓட்டு போட மாட்டோம். அரசியல் கட்சி நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. கோடிக்கணக்கில் செலவாகும். இப்ப நடக்கப்போற மாநாட்டுக்கு எப்படியும் 60 லிருந்து 70 கோடி வரை செலவாகும். இதுக்கெல்லாம் பணம் வேணும். இந்த மாதிரி 4 மாநாடு நடத்தினா பணமெல்லாம் போயிடும். அதுக்கு அவர் சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியல் வேலைகளை செய்திருக்கலாம்’ என சொல்லி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top