அரியர்ஸ்சுக்குப் பயந்து விஜய் எல்லாம் காலேஜ விட்டே ஓடிவிட்டாரா..!? இயக்குனர் நக்கல்!

by sankaran v |
அரியர்ஸ்சுக்குப் பயந்து விஜய் எல்லாம் காலேஜ விட்டே ஓடிவிட்டாரா..!? இயக்குனர் நக்கல்!
X

இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜீத் நடித்த பில்லா படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் அஜீத்துக்கு ஒரு ஸ்மார்ட் லக்கையும் வித்தியாசமான ஸ்டைலையும் கொடுத்தது. படத்தில் அஜீத் ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் நடித்து இருந்தார். ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்ட படம் இது. நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து பில்லா 2ம் வெளியானது.

விஜய் குறித்து இவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது காலேஜ் கிளாஸ்மெட்ஸ் யார் யார்னும் லிஸ்ட் போட்டுள்ளார். விஜய் இவருடைய சீனியராக இருந்துள்ளார். அவர் படிப்பை நிறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இந்த வீடியோவில் என்னென்ன சொல்கிறார்னு பாருங்க.

லயோலா காலேஜிக்குப் போகும்போது பர்ஸ்ட் எனக்கு சீட் கொடுக்கல. எதுக்கு எனக்கு சீட் கொடுக்கலன்னு கேட்டேன். எதுக்கு உனக்கு சீட் கொடுக்கணும்னு கேட்டாரு. நான் சொன்னேன்.

மேக் யுவர் ப்ரௌடு பாதர்னு. அப்படி சொல்லிவிட்டு சிரிக்கிறார். நாங்கள் சிறந்த பேட்ச் மாணவர்களாக இருந்தோம். இதுவந்து பேச்சுக்குச் சொல்லல. நிஜமாகவே தான் சொல்றேன்.

என்னோட கிளாஸ்மேட்ஸ் புஷ்கர் காயத்ரி, குமாராஜா, விஜய் ஆண்டனி, விஷால்னு சொன்னாரு. அப்போ தளபதி விஜய் உங்களுக்கு சீனியர் இல்லையான்னு கேட்டாங்க. அதுக்கு அப்படி எல்லாம் சுத்தமா கிடையாது. அங்கே போனதுக்கு அப்புறம்தான் தெரியும். விஜய் எல்லாம் இங்கே படிச்சாரு. டிஸ் கன்ட்டினியு பண்ணிட்டுப் போயிட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதுக்கு வந்த கமெண்டைப் பாருங்க. விஜய் எல்லாம் காலேஜ்ல பெயில் ஆகிருப்பார். அரியர்ஸ்சுக்குப் பயந்து டிஸ்கன்டினியு பண்ணிட்டு ஓடிருப்பாருன்னு கலாய்ச்சிருக்காங்க.

ஆரம்பம், அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா உள்பட பல படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் விஜயை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story