இப்படி ஒரு விஷேசமான நாளா அன்னிக்கு? ‘கூலி’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி

by ராம் சுதன் |

குட் பேட் அக்லி படம் ஒரு பக்கம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. அந்தப் படத்திற்கு பிறகு ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பெரிய படங்களில் அடுத்து ரஜினியின் கூலி திரைப்படம் தான் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் .

அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது .இதற்கிடையில் படத்தின் டீசர் 14ஆம் தேதியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் மார்ச் 14 தேதியில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்று பார்த்தால் இரண்டு சம்பவங்களை கூறுகிறார்கள். ஒன்று சிவாஜிராவ் எப்படி ரஜினி ஆக மாறினார் என்பது அனைவருக்குமே தெரியும் .

அப்படி ரஜினி ஆக மாறிய தேதி மார்ச் 14 என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல அன்றுதான் லோகேஷின் பிறந்த நாளும் கூட. அதனால் அந்த தேதியில் கூலி படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது .கூலி படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு பெரிய மல்டி ஸ்டார் திரைப்படமாக வர இருக்கிறது .ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் சத்யராஜ் ,உபேந்திரா, நாகார்ஜுனா, அமீர்கான் ,சௌபின் சாகிர் என அனைத்து மொழிகளிலும் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் .

அதனால் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத்தான் இது தயாராக இருக்கிறது .தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தை லோகேஷ் உருவாக்கி இருக்கிறார். இதற்கு முன்பு வரை போதை ஆல்கஹால் என இவைகளை மையப்படுத்தி தான் படத்தை தந்திருக்கிறார். ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதின் பேரில் தன் படத்தில் அந்த மாதிரி விஷயங்கள் இருக்கக் கூடாது என்று சொன்னதனால் தான் தங்கக் கடத்தலை கையில் எடுத்திருக்கிறார் லோகேஷ்.

படத்தின் கதையையும் தாண்டி ரஜினியின் மாஸ் வழக்கம் போல இந்த படத்தில் எதிர்பார்ப்பையும் மீறி அதிகமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்கு லோகேஷ் ஒரு காரணம். ஏனெனில் தன் படங்களில் ஆக்சன் கமர்ஷியல் என அனைத்தையும் த்ரில்லர் கலந்து கொடுப்பதில் லோகேஷை அடிச்சுக்க யாரும் கிடையாது. இதில் ரஜினியும் சேர்ந்திருப்பதால் படம் வேறு லெவலில் இருக்கப் போகிறது.

Next Story