இனிமே நடிப்புக்கு தடாவா? மீண்டும் டைரக்‌ஷனில் தனுஷ்… வெளியான சூப்பர் அப்டேட்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:50  )

Dhanush: நடிகர் தனுஷ் தன்னுடைய டைரக்‌ஷனில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டை தாண்டி பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிப்பில் கொடி கட்டி பறந்து வந்தார். நடிப்பில் பிஸியாக இருந்து வந்த நிலையிலும் இயக்கத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார்.

அவரின் இயக்கத்தில் பா பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சில வருடங்கள் கழித்து தனுஷ் இயக்கத்தில் கடந்தாண்டு ராயன் திரைப்படம் வெளியானது. தனுஷ், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து இள நடிகர்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் சூப்பர்ஹிட் அடித்தது. இதைதொடர்ந்து தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இளையராஜா பயோபிக்கும் நடிக்க இருக்கிறார். இது ஒருபுறமிருக்க இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் இட்லிக்கடை திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கும் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் தற்போது இன்னொரு திரைப்படமும் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பை போல இயக்கத்திலும் தொடர்ந்து ஸ்கோர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story