வாழ்க்கை கொடுத்த சுள்ளானை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்குகிறாரா திடீர் தளபதி?!

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும் அவருக்கு வாழ்க்கை கொடுத்தது என்னவோ நடிகர் தனுஷ் என்ற பேச்சு தான் கோலிவுட் வட்டாரத்தில் நிலவுகிறது. அதற்கேற்ப தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பின் மீது இருந்த உறுதியை பார்த்த நடிகர் தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் திரைப்படத்தை தயாரித்தார்.
படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்தது. அதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையாக திரைப்படங்கள் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆனால் தன்னை வளர்த்து விட்டேன் என்று தன்னை மட்டம் தட்டுபவர்கள் தான் அதிகம் என அவர் பேசுவது ரசிகர்களிடம் சர்ச்சையை கிளப்பியது.
சொன்னாலும், சொல்லாட்டியும் நடிகர் தனுஷ் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் உங்களால் இந்த இடத்திற்கு வர முடியாது என தனுஷ் ரசிகர்கள் அடிக்கடி அவரை குறிப்பிடுவதுண்டு. அப்படியே அவரை வளர்த்துவிட்டால் நடிகர் தனுஷையே தற்போது சிவகார்த்திகேயன் மிஞ்சி இருக்கிறார்.
சமீபத்தில் அவன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை குறித்தது. இதனால் தற்போது சிவகார்த்திகேயனின் சம்பளம் தாறுமாறாக அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை வளர்த்துவிட்டால் நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தாலும் 30 கோடி சம்பளத்தை அவரால் இன்னும் எட்ட முடியவில்லை.
ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தின் ஒரு படம் என பிசியாக வலம் வருகிறார். இதை விமர்சிக்கும் விதமாக பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தளத்தில், நான் உனக்கு த்ரீ படத்துல காமெடியன் கேரக்டர் தந்து, எதிர்நீச்சல்ல ஹீரோவாக்கி விட்டேன். நீ அமரன்ல தேசபக்தி, பராசக்தில திராவிடம் நடித்து டப்புனு 100 கோடி சம்பளம் வாங்குவ.
ஆனால் நான் தலித் முன்னேற்ற படமான அசுரன், கர்ணன், கேப்டன் மில்லர்னு நடிச்சி தேசிய விருது வாங்க நிறைய லாபி செஞ்சி, அரசியல்வாதி மாதிரி வெள்ள வேட்டி, சட்டை கெட்டப்பே போட்டாலும் 50 கோடிதான் சம்பளம் வாங்கனும்? எனக் கலாய்த்து இருக்கிறார்.