கேம் சேஞ்சர் பிளாப் ஆக காரணமே இதுதான்!. அட தில் ராஜுவே சொல்லிட்டாரே!...

by சிவா |
கேம் சேஞ்சர் பிளாப் ஆக காரணமே இதுதான்!. அட தில் ராஜுவே சொல்லிட்டாரே!...
X

Game Changer: தென்னிந்தியாவில் அதிக பட்ஜெட்டில் படமெடுக்க துவங்கிய முதல் இயக்குனர் ஷங்கர். இதுவரை குறைவான பட்ஜெட்டில் ஒரு படத்தை கூட இவர் இயக்கியதே இல்லை. இவர் முதலில் இயக்க நினைத்தது குறைவான பட்ஜெட்டில் ஒரு காதல் கதைதான். ஆனால், பெரிய பட்ஜெட்டில் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் குஞ்சுமோன் சொன்னதால் ஜென்டில்மேன் படத்தை அதிக பட்ஜெட்டுகளில் எடுத்தார்.

அதிக பட்ஜெட்: அதன்பின் அதே ரூட்டிலேயே பயணிக்க துவங்கினார். இவரின் படங்களில் பாடல் காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாக எடுப்பார். இவர் பாடலுக்கு செய்யும் செலவில் மினிமம் பட்ஜெட்டில் ஒரு படத்தையே எடுத்துவிடலாம். பார்ப்பதற்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தாலும் படம் நல்ல வசூலை அள்ளிவிட்டால் தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார். அதுவே படம் தோல்வி என்றால் தயாரிப்பாளரின் நிலை அதோகதிதான்.

தயாரிப்பாளரை மதிக்காத ஷங்கர்: ஷங்கர் இயக்கிய ஐ படத்தை தயாரித்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதன்பின் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. ஆனால், ஷங்கர் அதைபற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. அடுத்து எந்த தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைக்கலாம் என கிளம்பிவிடுவார். ஷங்கருக்கு இன்னொரு பழக்கம் உண்டு. இதுதான் பட்ஜெட், இவ்வளவு நாள் படப்பிடிப்பு என எதையும் தயாரிப்பாளரிடம் சொல்லமாட்டார். எவ்வளவு நாள் ஆனாலும் எடுத்துக்கொண்டே இருப்பார்.

அது எவ்வளவு கோடி என்றாலும் தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என நினைப்பார். இதைவிட கொடுமை என்னவென்றால் அப்படி அவர் எடுக்கும் முழு படத்தை தயாரிப்பாளருக்கு போட்டு காட்டவும் மாட்டார். இத்தனைக்கும் அவரே மினிமம் பட்ஜெட்டில் அவரின் உதவியாளர்களை வைத்து பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இந்தியன் 2 தோல்வி: லைக்கா தயாரிப்பில் கமலை வைத்து இந்தியன் 2 எடுத்து பிளாப் கொடுத்தார். அதேபோல், தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தை கோடிகளை கொட்டி எடுத்தார். இந்த படத்தில் இடம் பற்ற பாடல் காட்சிகளுக்கு மட்டுமே 75 கோடி செலவு செய்தார் ஷங்கர். அதிலும், படத்தில் இடம் பெறாத ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்தார்.

கேம் சேஞ்சர் தோல்விக்கு காரணம்: அப்படி வெளியான கேம் சேஞ்சர் படம் சூப்பர் ஃபிளாப் ஆனது. இந்நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘கதை மற்றும் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் பிரம்மாண்டத்தின் மேல் கவனம் செலுத்தியதால்தான் கேம் சேஞ்சர் படம் தோல்வி அடைந்தது’ என சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்து யார் கிடைப்பார் என தேடிக்கொண்டிருக்கிறார் ஷங்கர்..

Next Story