வேட்டையன் அடுத்த பார்ட்!.. இதான் டைட்டில்!.. ஞானவேலுக்கு ஓகே சொல்லுவாரா தலைவரு?!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:09  )

Vettaiyan: சமீபகாலமாகவே ஒரு படம் நன்றாக ஓடிவிட்டால் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது என்பது அதிகரித்து வருகிறது. பாகுபலி படம் அப்படி 2 பாகமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்கவே எல்லோரும் அதை செய்ய துவங்கிவிட்டனர். கேஜிஎப் 2 பாகங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது.

அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் சூப்பர் ஹிட் அடிக்கவே இப்போது அதன்பின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. கமல்ஹாசனின் இந்தியன் 2 வெளியானது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடிக்கவே விரைவில் 2ம் பாகம் உருவாகவிருக்கிறது.

கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2-வில் ரஜினி நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஜெய்பீம் பட இயக்குனர் தா.ச.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் வேட்டையன். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தில் என்கவுண்ட்டர் பற்றி விரிவாக பேசப்பட்டிருந்தது. துவக்கத்தில் என்கவுண்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியான ரஜினி ஒரு கட்டத்தில் அதில் உள்ள தவறுகள் பற்றி தெரிந்துகொள்கிறார். அதன்பின் என்கவுண்ட்டருக்கு எதிராக பேச துவங்குகிறார். அதோடு, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றியும் பேசி இருக்கிறார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், ஓரளவுக்கு வசுலையும் பெற்றது. படம் வெளியாகி 4 நாட்களில் 240 கோடி வசூல் செய்துவிட்டதாக லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் தமிழகத்தில் மழை பெய்யவே வேட்டையனுக்கு வசூல் குறைந்தது.

இந்நிலையில், வேட்டையன் படத்தின் முன்கதை (Prequel) குறித்து ஆர்வமாக இருக்கிறேன். அப்படத்திற்கு வேட்டையன்: The Hunter என தலைப்பை யோசித்து வைத்திருக்கிறேன். இந்த கதை அதியனின் பயணம் குறித்து பேசும்’ என சொல்லி இருக்கிறார். ஞானவேலுக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்றாலும் ரஜினி சம்மதம் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story