படத்துல கெட்ட வார்த்தை வச்சது இதுக்கு தான்... பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன அமரன் பட டைரக்டர்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:45  )

நாளை தீபாவளியை முன்னிட்டு தமிழ் சினிமாவில் 3 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. ஆனால் அனைவருக்கும் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்திற்காக பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கின்றார். மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கின்றது. இப்படத்தில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார். மேலும் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்திருக்கின்றார். சமீப நாட்களாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ட்ரைலர் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். தொடர்ந்து படக்குழுவினர் பிரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி என படத்தை சேர்ந்த பிரபலங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பல youtube நிகழ்ச்சிகளுக்கும் பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள்.

நேற்று இந்த திரைப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கலந்து கொண்டார். அதில் செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஜ்குமார் பெரியசாமி, இந்த திரைப்படம் ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் வேலையை சார்ந்ததை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

ஒரு சாதாரண மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் என்னென்ன செய்கிறார். மேலும் ஒரு வேலையில் பணிச்சுமை, டென்ஷன் இதுபோன்ற பல விஷயங்கள் இருக்கும். அதே சமயம் மிக மிக கட்டுக்கோப்பான ஒரு டிசிப்ளினான பணி இந்தியன் ஆர்மி. அவர்களின் வேலையை பிரதிபலிப்பதற்காக விஷயங்களை படத்தில் செய்து இருக்கின்றோம். அது படம் பார்க்கும்போது எதற்காக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு புரியும் என விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

Next Story