இந்நேரம் சூர்யா நாலு படம் நடிச்சிருப்பாரு! கங்குவா பற்றிய கேள்விக்கு இயக்குனர் கொடுத்த தரமான பதில்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:09  )

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கங்குவா. படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் படத்திற்கான புரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கூடிய சீக்கிரம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் சென்னையில் ஒரு சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறப் போவதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

படத்தை பற்றியும் படத்தில் சூர்யா நடித்ததைப் பற்றியும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் சிறுத்தை சிவா பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் சிறுத்தை சிவா பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். சிறுத்தை சிவா கூறும் போது அனைவரின் கேள்வியாக ‘இவ்வளவு நேரத்தில் சூர்யா கங்குவா மாதிரி நான்கு படங்களில் நடித்திருக்கலாமே ’ என்றுதான் கேட்கிறார்கள்.

ஆனால் நான்கு படத்தோட மொத்த கிராஸும் இந்தப் படம் பண்ணும் என்பது என்னுடைய நம்பிக்கை என சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் சூர்யா சார் குரலிலேயே வெளியிட முயற்சி பண்ணுவதாகவும் தமிழில் அவருடைய டப்பிங் முடிந்து விட்டதாகவும் கூறிய சிறுத்தை சிவா இப்போ ஏஐ வந்துவிட்டதால் மற்ற மொழிகளிலும் சூர்யா சார் குரலை கொண்டு வர முயற்சி செய்து வருவதாக சிறுத்தை சிவா கூறியிருக்கிறார்.

மேலும் ஞானவேல் ராஜா கூறும் போது கங்குவா படத்தின் மொத்த வசூலையும் ஜிஎஸ்டி சலானோட ஸ்டூடியோ கிரீன் அக்கவுண்டில் ட்வீட் பண்ண சொல்லிவிடுகிறேன்.அதுக்கப்புறம் எல்லா ப்ரோடுயூசர் கிட்டையும் ஜிஎஸ்டி சலான் கேட்டீங்கன்னா கரெக்டான நம்பரே ரசிகர்களுக்கு தெரிந்து விடும். மேலும் 1000 கோடியையும் தாண்டி 2000 கோடி வரை வசூலை எதிர்பார்ப்பதாகவும் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்று சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். அதில் முதல் 2 மணி நேரம் கங்குவாவாக சூர்யா டெர்ராக வருவார். மீதமுள்ள 25 நிமிடங்கள் ஃபிரான்சிஸ் கேரக்டரில் மற்றொரு சூர்யா மிகவும் காமெடியான கதாபாத்திரத்தில் வருகிறார் என்றும் சிறுத்தை சிவா கூறியிருக்கிறார்.

Next Story