ஆசையாக இருந்த சிவகார்த்திகேயனுக்கு அல்வா கொடுத்த சூப்பர் நடிகர்… தீபாவளிக்கு பல்போ?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:32  )

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் அடையாளமாக தன்னை நினைத்துக் கொள்ளும் ஆசைக்கு தற்போது பிரபல நடிகர் ஒருவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் செய்தி வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகிறது. அதில் கிளைமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் துப்பாக்கியை பிடிங்க சிவா என பேசிய டயலாக் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதைத் தொடர்ந்து அவர் ரசிகர்களை கவனிக்க வைத்தார்.

இந்த திடீர் புகழுக்கு பின்னர் முதல் முறையாக அவருடைய அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தை குறிவைத்து வெளியாக இருக்கிறது. பொதுவாக இது போன்ற பெரிய பண்டிகைக்கு முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள்தான் ரிலீஸுக்கு தயாராகி வரும்.

ஆனால் இந்த முறை முன்னணி நடிகர் திரைப்படம் என்றால் அது சிவகார்த்திகேயன் என்ற நிலை உருவாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தீபாவளி ரேஷில் ஜெயம் ரவியின் பிரதர், கவின் பிளடி பெக்கர் உள்ளிட்ட திரைப்படங்களும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த லிஸ்டால் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என ராஜ்கமல் நிறுவனம் உறுதியாக இருந்தது. ஏனெனில் பிரதர் மற்றும் பிளடி பெக்கர் பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை.

தளபதி இடத்தை அடுத்து பிடிக்க இருப்பது எஸ்கே தான் என்பதால் அவருடைய அமரன் திரைப்படம் தான் அதிக காட்சிகளில் ஒளிபரப்பாகும் என நம்பி வந்தனர். இதனால் வசூலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஆசைக்கு பெரிய அளவில் இடி விழுந்திருக்கிறது.

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் ஃபேன் இந்தியா படமாக தீபாவளிக்கு வெளியிட முடிவெடுத்துள்ளனர். இதனால் சிவகார்த்திகேயனை விட அதிக ரசிகர்களைக் கொண்ட துல்கரின் திரைப்படத்திற்கு தான் அதிகளவு தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தற்போது கதை மாறி இருக்கிறது.

இருந்தும் முதல் நாள் விமர்சனத்திற்கு பிறகு இந்த கதை மொத்தமாக மாறும். எந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெருகுகிறதோ அதற்குதான் அதிக அளவில் தியேட்டர் எண்ணிக்கை கூடும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story