கங்குவா படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்... அவரு சொல்றதும் நியாயம்தானே..!
ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பிரம்மாண்டமான படம் கங்குவா. இது ஒரு பீரியட் பிலிமாகத் தயாராகி வருகிறது. இநதப் படத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்து அசத்த உள்ளார். அவரது மேக்கப் போடவே 2மணி நேரமாகும். தலையெல்லாம் ஒரே சடைமுடியாக காட்டுவாசி போன்ற தோற்றத்தில் மிரட்டுகிறார்.
வில்லனாக பாபிதியோல் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். வேட்டையன் படம் ரிலீஸாகும் தேதியில் முதலில் கங்குவா படமும் ரிலீஸ் என்று அறிவித்தார்கள். அக்டோபர் 10ல் இருந்து வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதில் பின்வாங்கவில்லை.
ஆனால் ரஜினி படத்திற்கு வழிவிட வேண்டும். அவர் ஒரு மூத்த நடிகர். மேலும் கங்குவா படம் தனியாக வந்தால் தான் நல்லது என்று எண்ணி படக்குழுவினர் நவம்பர் 14ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். ஆனால் வேட்டையன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை ஈட்டவில்லை. கங்குவா படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
சூர்யா வழக்கமாக வித்தியாசமான கெட்டப் என்றால் பின்னிப் பெடல் எடுப்பார். அதிலும் ஏழாம் அறிவு, பிதாமகன், கஜினி படங்களில் மாஸ் காட்டியிருப்பார். அந்த வகையில் இந்தப் படத்திலும் ரொம்பவே மாஸாக நடித்திருப்பார் என்று தெரிகிறது.
ஞானவேல் ராஜா இந்தப் படம் 2000 கோடி வரை வசூலை ஈட்டும் என்றும் உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளார். அந்த வகையில் இந்தப் படத்தில் நடிக்க மறுத்த ஒரு நடிகர் பற்றிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதுபற்றி அந்த நடிகர் யார்? என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
கங்குவா படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தது. சம்பளம் செட் ஆகாதுன்னு விட்டுட்டேன். இந்த மாதிரி நிறைய படம் விட்டிருக்கேன். நான் பெரிய படங்கள் நிறைய பண்ணியாச்சு.
இன்னும் இப்படியே குறைந்த சம்பளத்தை வாங்கிகிட்டு இருந்தா என்ன பண்றதுன்னு கேட்கிறார் பிரபல நடிகர் பவன். இவர் வடசென்னை படத்தில் நடித்துள்ளார். இவர் மேலும் அதற்கு சொல்ற காரணம் தான் நியாயமாகத் தோன்றுகிறது.
சின்ன படங்களில் நடிப்பதால் கோடி கோடியாக கொடுத்திட மாட்டாங்க. இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கும். அதுவே பெரிய படத்துக்கு போனா ஒண்ணும் கிடைக்காது. போனா பணத்துக்காக மட்டும் தான் போகணும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.