குட் பேட் அக்லி முதல் சிங்கிளுக்கு நாள் குறித்த படக்குழு… தயாராகும் அஜித் ரசிகர்கள்!

by ராம் சுதன் |
குட் பேட் அக்லி முதல் சிங்கிளுக்கு நாள் குறித்த படக்குழு… தயாராகும் அஜித் ரசிகர்கள்!
X

Good Bad Ugly: தமிழ் சினிமாவில் தற்போது அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தினை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். முதலில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் ஆதிக் ரவிசந்திரன்.

அப்போதே அஜித்துடன் ஒரு படத்தில் இணைய ஆசைப்பட்டு அவரிடம் கேட்ட போது ஒரு ஹிட் படத்தினை கொடுத்து விட்டு வரச் சொல்லி இருக்கிறார். அங்கு தொடங்கிய ஆதிக் தன்னுடைய ஆசையை மார்க் ஆண்டனி வெற்றியால் கையகப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி அறிவிக்கப்பட்டு பரபரப்பாக நடந்தது. கிட்டத்தட்ட கடந்த சில வருடங்களில் வேகமாக அஜித் படப்பிடிப்பை முடித்ததும் இந்த படத்திற்கு தான் என்று கூறலாம். கிட்டத்தட்ட படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தினை நெருங்கிவிட்டது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட தற்போது தமிழ் சினிமாவின் திரைப்படங்களின் டீசர்களில் அதிக நேரம் பார்க்கப்பட்ட டீசர் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. தொடர்ந்து யூட்யூப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிளை இந்த வார இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதிகபட்டசமாக மார்ச் 10க்குள் முதல் சிங்கிள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இப்படத்தினை ஏப்ரல் 10ந் தேதிக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Next Story