OG அஜித் வந்துட்டாருப்பா… குட் பேட் அக்லி டீசர் செய்த சாதனை… விஜய் ஃபேன்ஸ் ஓரமா போங்கப்பா!

Good Bad Ugly: அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் தளபதி விஜயின் படங்களின் சமீபத்திய சாதனையை மொத்தமாக முறியடித்து இருக்கிறது.
கோலிவுட்டில் ஒரு காலத்தில் விஜய்க்கு சம போட்டியாக இருந்தவர் அஜித் மட்டும்தான். ஆனால் அவர் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய நடிப்பில் அதீத கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். பெரிய அளவில் அவருடைய படங்களுக்கு பிரமோஷன் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இதற்கு முன் இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.
அப்படம் கொடுத்த நம்பிக்கைதான் அஜித் இவரை தன்னுடைய அடுத்த இயக்குனராக மாற்றி இருக்கிறார். ஆதிக் அந்த நம்பிக்கையை தற்போது அதிக அளவில் காப்பாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அஜித் சீரியஸான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார்.
அவருடைய எதார்த்தமான காமெடி குணம் வெளிப்படாமலே இருந்து வந்தது. தற்போது குட் பேட் அக்லியில் இப்படி ஒரு கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் டீசருக்கான வியூஸ் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கர் தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் மாமே இதுதான் சம்பவம் எனக் குறிப்பிட்டு யூட்யூப்பில் குட் பேட் அக்லி 25 மில்லியன் வியூஸ் பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இத்திரைப்படத்தின் டீசர் தான் கோலிவுட்டில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக மாறி இருக்கிறது.
இதனால் விஜய் திரைப்படங்களான லியோ, மாஸ்டர், பிகில் செய்த சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இன்னும் விஜய் ஒரு படம் செய்ய இருப்பதால் ஜனநாயகன் மிகப்பெரிய வியூ கொடுத்து யாரும் நெருங்க முடியாத சாதனையை செய்யும் என எதிர்பார்க்கின்றனர் விஜய் ரசிகர்கள்.