Cinema News
இந்தி சினிமாவின் ஆதிக்கத்தை விரட்டி அடித்த இளையராஜா… எப்படின்னு தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல் இருவருக்கும் போட்ட இளையராஜாவின் பாடல்கள் செம மாஸாக இருந்தன.
அது தவிர அவர் இசை அமைத்த பிற நடிகர்களான கார்த்திக், பிரபு, சத்யராஜ், சரத்குமார், மோகன், ராமராஜன் பாடல்களும் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்தன.
அவர் இசையில் ஆதிக்கம் செலுத்தியதைப் போல தமிழ்சினிமாவிலும் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளராக இருந்தார். அவரது பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாகத் தான் இருந்தன. பாடல்களுக்காகவே ஓடிய படங்களும் உண்டு.
ஒரு காலத்தில் இளையராஜாவின் பாடல்கள் எல்லாம் வருவதற்கு முன்பு இந்திப்படங்களையும் தமிழக ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர். அவர்கள் எப்படி இங்கு வந்து கவர்ந்தனர் என்று பார்த்தால் அந்தப் படங்களின் பாடல்கள் ஹிட் ஆகின என்று தான் சொல்ல வேண்டும்.
யாதோங்கி பாரத், மைனே பியார் கியா ஹை, சத்மா, ஏக் துஜே கேலியே என ஒரு சில படங்களை உதாரணத்திற்குச் சொல்லலாம். ஆனால் இளையராஜா வருகை தான் இந்திப்படங்களை திருப்பி அனுப்பின என்கிறார் பிரபலம் ஒருவர். அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
தமிழ்சினிமா ரசிகர்கள் இந்திப் படத்தை ரசித்ததால் தான் அதற்கு மவுசு அதிகமாக இருந்தது. அதை ஆதிக்கம் என்று சொல்ல முடியாது. குறிப்பாக அந்தப் படங்களில் வந்தப் பாடல்கள் இங்குள்ள ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.
இளையராஜாவின் வருகைக்கு முன்னாடி தான் அது மிக அதிகமாக இருந்தது. அவரது வருகைக்குப் பிறகு தான் இந்திப் படங்களின் ஆதிக்கம் குறைந்தது. ஏன்னா அவரோட பாடல்களை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்க ஆரம்பித்து விட்டனர். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் இங்குள்ள படங்களை அங்கு டப் செய்வார்கள். அதே போல அங்குள்ள சிறந்த கதை அம்சம், பாடல்கள் கொண்ட படங்கள் இங்கு ஓடும்.
ரஜினி, கமல் இந்தியில் சென்றும் தங்கள் திறமையை நிலை நாட்டினர். அதே போல அங்கு இருந்து அமிதாப்பச்சன், திலீப்குமார் படங்கள் இங்கு சக்கை போடு போட்டன. பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களையும் பெருமளவில் இந்தியில் ரீமேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.