தனுஷ், நித்யாமேனன் கிளாஸ் உடன் கொடுக்கும் ஜாலி போஸ்... லீக்கான அந்த வீடியோ

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:44  )

நடிகை நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இந்தப் படத்தின் கதாநாயகன் தனுஷ். தேசிய விருதைப் பெற்றதும் தனுஷ் உடன் மீண்டும் இணைந்து நடிக்கிறேன் என்றார். அது என்ன படம் என்று அப்போது சொல்லவில்லை.

இப்போது அது தனுஷ் தயாரித்து இயக்கி நடிக்கும் இட்லி கடை என்று தெரிய வந்துள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பின்போது தனுஷ் உடன் சேர்ந்து டீ குடிப்பது போன்று ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். தேனி மாவட்டத்தைச் சுற்றிலும் கதை நகர்வதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு தான் படமாக்கப்பட்டு வருகின்றன.

தனுஷ் தற்போது இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய இரு படங்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இட்லி கடை படம் திருச்சிற்றம்பலம் மாதிரி பேசப்படும் என்கிறார்கள். இந்தப் படத்தில் தனுஷூக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளாராம். நித்யா மேனன் ஜோடி சேர்கிறார்.

அதே போல சத்யராஜ், ராஜ்கிரண் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்களாம். இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் விவரிக்கும் காட்சி ஒன்று தற்போது இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது படக்குழுவை அதிர்ச்சி அடையவும் வைத்துள்ளதாம்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்து அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

தனுஷ் படத்திற்குத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து வருகிறார். இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதனால் தான் பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், மாறன், வாத்தி என தொடர்ந்து இசை அமைத்து வருகிறார். கேப்டன் மில்லர் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் இவர் தான் இசை அமைப்பாளர்.

Next Story