'தாய்கிழவி' வைபில் பரபரப்பாக ரெடியாகும் இட்லி கடை படத்தின் பாடல்.. லீக்கான வீடியோ..!

Actor Dhanush: தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். ஒரு பக்கம் தன்னுடைய இயக்கம், மற்றொரு பக்கம் மற்ற இயக்குநர்களின் படங்கள் என்று நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றார் நடிகர் தனுஷ். ராயன் திரைப்படத்திற்கு பிறகு ஏகப்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
தனுஷின் இயக்கம்: ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு நடிகர் தனுஷ் இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனான பவிசை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார். படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
இந்த திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்திருக்கின்றார் நடிகர் தனுஷ். மீண்டும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். படத்தில் இருந்து வெளியான பாடல், டீசர், ட்ரைலர் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கின்றது. நிச்சயம் இந்த திரைப்படம் இளம் தலைமுறைக்கு பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இட்லி கடை: நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தை தவான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகின்றா.ர் இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகின்றார். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
இட்லி கடை பாடல்: நடிகர் தனுஷ் தன்னுடைய இயக்கம் மட்டுமல்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். அந்த வகையில் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், தமிழரசன் பச்சைமுத்திய இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.
இது இல்லாமல் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இப்படி பிஸியாக இருந்து வரும் தனுஷ் இட்லி கடை படத்தையும் விறுவிறுப்பாக எடுத்து வருகின்றார். ஏற்கனவே நடிகர் தனுஷ் நித்யா மேனுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் இருந்து வெளிவந்த தாய் கிழவி பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைப் போலவே இட்லி கடை திரைப்படத்திலும் ஒரு கிராமத்து செட்டப்பில் பாடல் ஒன்று எடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் லீக்காகி இருக்கின்றது. இதை பார்த்த பலரும் தாய் கிழவி பாடல் போல் இருப்பதாக கூறி வருகிறார்கள்.