இளையராஜாவும் ஏஆர் ரஹ்மானும் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள்! லிஸ்ட் போயிட்டே இருக்கே

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:54  )

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய இசையால் அனைவரையும் கட்டி போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா தொடர்ந்து இன்று வரை தன்னுடைய அபாரமான இசையால் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறார்.

இவருடைய இசையில் அமைந்த பாடல்களை கேட்கும்போது தன்னையே மறக்கும் அளவுக்கு மேஜிக் செய்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். எல்லா விதமான உணர்வுகளுக்கும் இவருடைய இசையில் அமைந்த பாடல்கள் மருந்தாக இருக்கின்றன. சோகமாக இருக்கும் போது இளையராஜா பாடல்களை கேள்.

பயணம் செய்யும்போது இளையராஜா பாடல்களை கேள். சந்தோஷமாக இருக்கும்போது இளையராஜா பாடல்களை கேள் என எல்லா விதமான உணர்வுகளுக்கும் நமக்கு ஒரு ஆறுதலாக இருப்பது இவருடைய பாடல்கள் தான். ரஜினி கமல் தொடங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இளையராஜா.

இவருக்கு போட்டியாக 90கள் காலகட்டத்தில் இசையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார் ஏ ஆர் ரகுமான். இன்று இசை ஜாம்பவான்கள் ஆக இவர்கள் இருவரும் தான் போற்றப்படுகிறார்கள் .இளையராஜாவையும் ஏ ஆர் ரகுமானையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பல கருத்துக்களை முன்வைத்து வந்தனர் .ஏ ஆர் ரஹ்மானை இளையராஜாவுக்கு பிடிக்காது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன .

ஆனால் முதன் முதலில் இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்தவர் ஏ ஆர் ரகுமான் தான். அதனால் இவர்கள் இருவரும் இணைந்து எந்தெந்த படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இளையராஜாவின் ஸ்டுடியோவில் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.

அப்போது முதன் முதலில் மூடுபனி என்ற படத்தில் தான் இளையராஜா உடன் இணைந்து ரகுமான் பணியாற்றினார். அப்போது ஏ ஆர் ரகுமானுக்கு வயது 12 தான். 1980களில் இருந்து தொடர்ந்து பல படங்களில் பணியாற்றிய ஏ ஆர் ரகுமான் மூடுபனி மூன்றாம் பிறை புன்னகை மன்னன் போன்ற படங்களிலும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருப்பதாக சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

Next Story