நான் சொன்ன விஷயம் வருமானு தெரியல! பயோபிக் பற்றி இளையராஜா பகிர்ந்த தகவல்
கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக இந்த சினிமா துறையில் தன் இசையால் அனைத்து ரசிகர்களையும் கொள்ளை கொண்டவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான இளையராஜா தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தார். இதன் பிறகு தமிழ் சினிமாவிலேயே ராஜாங்கம் செய்யும் அளவுக்கு இவருடைய இசை பிரபலமானது.
கிட்டத்தட்ட பெரிய பெரிய நடிகர்களின் கால்ஷீட் போக இவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தான் ஏராளம். அந்த அளவுக்கு பல படங்களில் இசையமைத்து வந்ததால் மிகவும் பிசியாக இருந்தார் . இந்த நிலையில் அவருடைய பயோபிக் இப்போது உருவாக இருக்கிறது. அந்த பயோபிக்கை இயக்குனர் அருண் மாதேஷ் இயக்க அதில் இளையராஜாவாக தனுஷ் தான் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதனால் தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் எது இந்த பயோபிக்கில் வைக்க வேண்டும் வைக்கக் கூடாது என்பது பற்றிய சில விவாதங்கள் ஆலோசனைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற இளையராஜா கான்செர்ட் நிகழ்ச்சியில் இளையராஜா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் .
அதில் அன்னக்கிளி உன்னை தேடுதே மற்றும் மச்சான பாத்தீங்களா போன்ற பாடல்களின் ஆக்கம் குறித்து சில விஷயங்களை கூறியிருந்தார். அதைப்பற்றி அவர் பேசும்போது நான் கிளாஸ் எடுக்கிறேன்னு நினைக்காதீங்க. என்னுடைய பயோபிக் உருவாக இருக்கிறது.
சில விஷயங்களை நான் பகிர்ந்திருக்கிறேன். அது அந்த படத்துல வருமானு தெரியல. என்னைப் பற்றி முழுமையாக தெரிந்து நீங்கள் சந்தோஷப் பட்டால் தானே அது எனக்கு சந்தோஷம். எல்லாத்தையும் என் மனசுல வச்சு நான் என்ன செய்யப் போறேன். நீங்க அதை பார்த்து மகிழ்ச்சியாய் இருக்கிறது தான் எனக்கு சந்தோஷம் என கூறியிருக்கிறாராம். அந்த தகவல் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.