முடிவுக்கு வந்த நீயா நானா போட்டி! அசால்ட்டா தூக்கிய சிவகார்த்திகேயன்.. என்ன தனுஷ் இப்படி ஆச்சே?

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:44:46  )
முடிவுக்கு வந்த நீயா நானா போட்டி! அசால்ட்டா தூக்கிய சிவகார்த்திகேயன்.. என்ன தனுஷ் இப்படி ஆச்சே?
X

புறநானூறு திரைப்படத்திலிருந்து சூர்யா விலக அதன் பிறகு அந்த படத்தில் ஒரு பக்கம் தனுஷ் நடிப்பதாகவும் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டே இருந்தது. சுதா கொங்கராவுடன் ஏற்கனவே தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனாலையே புறநானூறு திரைப்படத்தில் அவர் நடிப்பார் என்றும் செய்தி பரவி வந்தன.

ஆனால் இந்தப் பக்கம் சிவகார்த்திகேயனும் சுதா கொங்கரா உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அந்தப் படத்தின் கதையே புறநானூறு படத்தின் கதைதான் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆக மொத்தம் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தான் செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால் இப்போது வந்த தகவலின் படி புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக உறுதியாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர்கள் யாரேனும் தயாரிப்பார்கள் என்று எண்ணியிருந்த நிலையில் திடீரென ஒரு புது தயாரிப்பாளரை இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறார்கள் புறநானூறு பட குழு.

இவர் பெயர் ஆகாஷ் கிருஷ்ணன். இவர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவராம். ஏற்கனவே லைக்காவுடன் இணைந்து ஆதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் இவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே ஒரு நெருக்கமான நட்பும் இருந்து வருகிறதாம்.

அக்ரீமெண்ட் வரை இதனுடைய பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள். ஏற்கனவே புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க அவருடைய 2d நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் கதையில் ஏற்பட்ட ஒரு சிறு கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலக அதன் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்ற முயற்சியில் சுதா கொங்கரா நினைத்திருந்தார்கள். கடைசியில் சிவகார்த்திகேயன் தான் இந்தப் படத்திற்கு கமிட்டாகி இருக்கிறார். ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் லைன் அப்பில் வரிசையாக பல நல்ல நல்ல படங்கள் இருந்து வருகின்றன. கூடிய சீக்கிரம் அவருடைய அந்த இலக்கை அடைந்து விடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

Next Story