மனைவி குடும்பத்தினர் விருப்பமில்லாமல் தான் கரம் பிடித்தாரா பிரேம்ஜி… இந்து வெளியிட்ட ஷாக்
Premji: பிரபல நடிகர் பிரேம்ஜியின் திருமணத்தில் அவருடைய மனைவி குடும்பத்தார் யாரும் கலந்து கொள்ளவில்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய குடும்பத்திலிருந்து வந்தவர் பிரேம்ஜி. இவர் முதலில் பாடல் பாடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். அவருடைய அண்ணனும், இயக்குனருமான வெங்கட் பிரபு இயக்கத் தொடங்கியதிலிருந்து அவர் படத்தில் கண்டிப்பாக ஒரு வேடத்தில் நடிக்க தொடங்கினார்.
சென்னை 28 தொடங்கி கடைசியில் வெளியான கோட் திரைப்படம் வரை வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி நடித்து வந்தார். தொடர்ச்சியாக பாடல்கள் பாடுவதையும், சில படங்களில் இசையமைப்பு பணிகளையும் செய்து வந்திருக்கிறார்.
தன்னுடைய சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணத்தை பல ஆண்டுகளாக தள்ளிப் போட்டு வந்தார். தமிழ் சினிமாவின் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் என அவரை பலரும் கலாய்த்து வந்தனர்.
45 வயது கடந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடக்காமல் மிக நெருங்கிய வட்டத்தினர் மட்டுமே கலந்து கொண்ட திருமணமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மனைவி இந்து பிரேம்ஜி, மசாலா கம்பெனி பிசினஸ் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 6 மாதங்கள் கடந்து இந்து பிரேம்ஜி சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய திருமணம் குறித்து பல சுவாரசிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்துவின் திருமணத்தில் அவரின் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி புகைப்படங்களை எடிட் செய்து தான் இணைத்து இருக்கிறாராம். ஆனால் தம்பியின் புகைப்படத்தை எடிட் செய்ய கூட முடியாத அளவு அவர் திருமணத்திலேயே கலந்து கொள்ளவில்லையாம்.
இருவருக்கும் காதல் திருமணம் என்பதால் பெண் வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்து தம்பி பிரேம்ஜியிடம் பேசக்கூட விரும்பவில்லை. அவரும் சில முறையில் பேச முயற்சி செய்தும் தோல்வியுற்றதால், அவராக புரிந்து கொண்டு வர வேண்டும் என விலகி இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read: இனி காதல் மட்டும்தான்!..'ரெட்ரோ' லுக்கில் மாஸ் காட்டும் சூர்யா.. டைட்டில் டீசர் எப்படி இருக்கு?..