அஜித் வேணுமா? 200 கோடி வேணுமா? தனுஷுக்கு இப்படி ஒரு நெருக்கடியா?
சமீப காலமாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது அஜித்தை இயக்கப் போகும் தனுஷ் என்ற செய்தி தான் அது. இது எந்த வகையில் சாத்தியமாகும் என ரசிகர்களும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து இந்த மாதிரி செய்தி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப் பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த செய்தி உண்மையோ இல்லையோ என்பது வேறு. ஆனால் என்னை பொருத்தவரைக்கும் 2027 வரை தனுஷ் மிகவும் பிசியாக இருக்கிறார். ஒரு பக்கம் ஹிந்தி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இட்லி கடை படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையும் இருந்து வருகிறது. அதை முடித்து இளையராஜா பயோபிக்கை கண்டிப்பாக அவர் எடுத்தே ஆக வேண்டும். தெலுங்கில் ஒரு படத்திலும் பிஸியாக இருக்கிறார்.
இப்படி இருக்கும் பொழுது எப்படி அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவார் என்பது தான் என்னுடைய கேள்வி. அப்படியே அவர் இயக்குகிறார் என்றாலும் அஜித்தை பொறுத்த வரைக்கும் அவருடன் கமிட் ஆகி விட்டோம் என்றால் அவர் படத்தை முடிக்க எப்படியும் ஒரு வருடம் ஆகும். குட் பேட் அக்லி திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்த இந்த படம் இந்த ஏப்ரலில் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அப்படி ஒரு வருடம் ஆகும் அஜித் படம் எடுப்பதற்கு. அந்த ஒரு வருடத்தில் தனுஷ் 3 அல்லது 4 படங்களில் நடித்து விடலாம். அது நடிக்கிறாரா இயக்குகிறாரா என்பது வேறு. ஆனால் அந்த ஒரு வருடத்தில் அவரால் 3 படங்களை முடித்து விடலாம் .அவருடைய சம்பளம் 50 லிருந்து 60 கோடி என சொல்லப்படுகிறது. 50 கோடி என்று வைத்துக் கொண்டாலும் மூன்று படத்திற்கு அல்லது நான்கு படத்திற்கு 200 கோடி. அப்போ அஜித்தின் அந்த ஒரு படத்திற்காக இந்த 200 கோடியை விடுவாரா தனுஷ்.
இன்னொரு பக்கம் அஜித்துடன் இணைகிறார் என்றாலும் அவருடைய சம்பளம் ஒரு 50 கோடி. அஜித்தின் சம்பளம் 200 கோடி. ஆக மொத்தம் அதனுடைய பட்ஜெட்டே பெரிய அளவில் போகும். இப்படியும் நாம் யோசிக்க வேண்டும். ஆனால் இந்த மாதிரி ஒரு தகவல் யார் உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். ஏனெனில் இது ஒரு வித்தியாசமான முன்மொழிதலாக பார்க்கப்படுகிறது.
இவர்கள் இரண்டு பேரும் ஒரு படத்தில் இணைந்து விட்டால் அது மிகப் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. யாராலும் இப்படி ஒரு காம்பினேஷனை நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படி ஒரு செய்தியை பரப்பி விட்டார்கள். இது நடக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாக வேறு ஒரு படமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது .என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் இது உண்மையா பொய்யா என்பதை அஜித்தோ அல்லது தனுஷோ சொன்னால்தான் நமக்கு தெரியும் என தனஞ்செயன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.