வந்தது விஜய் இல்லையா? கடைசில இப்படி சொல்லிட்டீங்களே.. ஷாக் கொடுத்த பிரபலம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:45  )

வேட்டையன் படத்தை பார்க்க விஜய் வந்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தேவி திரையரங்கத்திற்கு முதல் நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் வந்திருக்கிறார் என்று பல youtube சேனல்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வந்தனர். ஆனால் அது பழைய கிளிப்பிங்ஸ் வீடியோவாக இருக்கலாம் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

நேற்று உலகெங்கிலும் ரிலீஸ் ஆனது வேட்டையன் திரைப்படம். ரஜினி நடிப்பில் த ச ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ராணாக்குபதி, அபிராமி, ரித்திகா சிங் என எண்ணற்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் இந்த படத்தில் நடித்திருந்தார். படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஜெய் பீம் இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் எந்த மாதிரி கதைக்களத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக சென்றனர்.

ஆனால் முழுக்க முழுக்க இது இயக்குனர் படமாகவே இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். பொதுவாக ரஜினி விஜய் அஜித் படங்களை பொறுத்த வரைக்கும் அது அந்தந்த நடிகர்களின் படங்களாகத்தான் இருக்கும். அதாவது அவர்களுடைய ஸ்டைல் அவர்களுடைய எண்ணம் இதை அடிப்படையாக வைத்து தான் அந்தப் படம் வெளியாகும்.

ஆனால் வேட்டையன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஞானவேல் என்ன நினைத்தாரோ அதை அப்படியே படத்தில் காட்டி இருக்கிறார். அதில் ரஜினியை நடிக்க வைத்திருக்கிறார் என அந்தணன் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று வேட்டையன் திரைப்படத்தை பார்ப்பதற்காக தேவி திரையரங்கத்திற்கு விஜய் வந்ததாக கூறப்படும் செய்தி என்னால் நம்ப முடியவில்லை என்றும் அந்தணன் கூறினார்.

ஏனெனில் அந்த வீடியோவில் பார்க்கும் பொழுது உள்ளே இருந்து அவர் வருவதற்கும் காரில் ஏறுவதற்கும் இடையேயான இடைவெளி என்பது மிகக் குறைவாக இருந்தது. இதுவே சத்தியம் தியேட்டராக இருந்திருந்தால் அதற்கான இடைவெளி மிக அதிகம். அதனால் சத்தியம் தியேட்டரை விட்டுவிட்டு ஏன் தேவி திரையரங்கத்திற்கு வந்தார் என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிறது .

அதனால் இது பழைய வீடியோவாக இருக்கலாம் என நினைக்கிறேன். இன்னொரு பக்கம் யோசிக்கும்போது விஜய் தியேட்டரில் வந்து படம் பார்க்க மாட்டாரா என்றால் பார்ப்பார். காசி திரையரங்கத்திற்கே வந்து படம் பார்த்திருக்கிறார் விஜய். ஆனால் எப்போது வருவார் என்றால் மிட் நைட் ஷோ அதாவது நள்ளிரவில் வந்து தான் படம் பார்ப்பார்.

அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. ஆனால் இப்போ விஜய் வந்தார் .முகத்தை மூடி இருந்தார். என்றெல்லாம் பார்க்கும் பொழுது விஜயை எந்த கோணத்தில் பார்த்தாலும் நம்மால் அடையாளம் காண முடியும் .ஆனால் இந்த வீடியோவில் அப்படி எதுவுமே தெரியவில்லை என அந்தணன் கூறியிருக்கிறார்.

Next Story