அடிச்சாச்சு… ஜாக்பாட்.. ரஜினியுடன் இணையும் மருமகன் தனுஷ்… அந்த சூப்பர்ஹிட் படமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:59  )

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தும், அவருடைய மூத்த மருமகனும், நடிகருமான தனுஷுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை கேட்ட ரசிகர்கள் செம குஷியாகி இருக்கின்றனர்.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பிரபலம். இருந்தும் அவருக்கே அண்ணாத்தே, தர்பார் உள்ளிட்ட தோல்வி படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.

இந்த வெற்றியால் ரஜினிகாந்த் எனர்ஜியாகி இருக்கிறார். இதனால் தொடர்ச்சியாக படங்களில் கமிட்டாகி இருக்கிறார். டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ந் தேதி ரிலீஸ் ஆனது. அப்படமும் சுமார் விமர்சனம் பெற்று வருகிறது.

தொடர்ச்சியாக தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பேன் இந்தியா நட்சத்திரங்கள் பலர் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த லிஸ்ட்டில் தற்போது நடிகர் தனுஷும் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் இருவரும் இணையும் முதல் படம் இதுதான் என்பதால் இரண்டு ரசிகர்களும் கொண்டாடி தீர்ப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story