நான் ஆணையிட்டால்! தெறிக்க விடும் ஜன நாயகன் செகண்ட் லுக் போஸ்டர்...

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த விஜய் பனையூரில் இருந்து கொண்டே அரசியலை ஹோம் ஒர்க் மாதிரி பண்ணுகிறார் என்று பலரும் கமெண்ட் அடித்த நிலையில் இப்போது பரந்தூர் வரையும் தன்னால் நேரில் சென்று மக்களை சந்திக்க முடியும். பேச முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இவரது அரசியல் வருகை பலருக்கும் கிலியைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். விஜயைப் பொருத்தவரை தான் எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதில் இருந்து பின்வாங்க மாட்டாராம். வெற்றியைப் பார்த்துவிட்டுத்தான் போவாராம். அதனால் ரசிகர்கள் ஆரம்பத்தில் சினிமாவை விட்டு முழுநேர அரசியலுக்குப் போகிறாரே என்று வருத்தப்பட்டனர்.

எச்.வினோத்: ஆனால் இப்போது விஜயின் அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் செய்வது சரிதான் என்றும் எண்ணத் தோன்றுகிறது. விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகனை அறிவித்து விட்டதால் இப்போது முதலே அந்தப் படத்தைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.தளபதி விஜய் நடிப்பில் தனது கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் 69வது படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இது அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட கதைகளம் என்பதால் விஜய்க்கும் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது. அவரது அரசியல் களத்தோட வெற்றிக்கு இது அச்சாரம் போடுவதாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன்: அதற்கேற்ப இந்தப் படத்தின் டைட்டிலும் குடியரசுதினமான இன்று ஜனநாயகன் என்று வைத்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு முதலில் நாளைய தீர்ப்பு என்று தான் டைட்டில் வரும் என்று பேசப்பட்ட நிலையில் ஜனநாயகன் என்று வந்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
பர்ஸ்ட் லுக்: நாளைய தீர்ப்பு ஏற்கனவே விஜய் நடித்த படம் என்பதால் அதற்கு போதுமான வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. அதில் விஜய் செல்பி எடுத்தபடி அசத்தலாகப் போஸ் கொடுத்தார்.

செகண்ட் லுக்: இந்த நிலையில் செகண்ட் லக் போஸ்டர் இப்போது வெளியாகி உள்ளது. நான் ஆணையிட்டால் என்ற இந்த போஸ்டரும் எம்ஜிஆரை நினைவுபடுத்துவதாக உள்ளது.