ஒரே ஒரு லைஃப்.. இப்படித்தான் இருக்கனும்! சுத்தமா மாறிட்டாரே ஜெயம்ரவி

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:41  )

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவி ஆர்த்திக்கும் இடையிலான விவாகரத்து பிரச்சனை பெரிய அளவில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஜெயம் ரவி தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ நினைப்பதாக கூறியிருக்கிறார்.

தன்னுடைய வீட்டில் இருக்கும் உடைமைகளை மனைவி ஆர்த்தியிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்த்தியின் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார் ஜெயம் ரவி .ஆனால் ஆர்த்தியின் தரப்பில் ஒரு முறை ஜெயம் ரவியுடன் பேச்சு வார்த்தை நடத்த ஆசைப்படுகிறேன் என்று கேட்டிருக்கிறார்.

இப்படி அவர்களுக்கு இடையேயான பிரச்சனை போய்க்கொண்டிருக்க ஜெயம் ரவி அவருடைய பிரதர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் படு குஷியாக கலந்து கொண்டு இளைஞர்களுக்கு உற்சாகமளித்து வருகிறார். விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு முதன் முதலில் பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜெயம் ரவி பாடகி கெனிஷாவை யாரும் தவறாக பேச வேண்டாம் என்றும் கேட்டு இருந்தார்.

அதைப் போல திடீரென மும்பையில் தனியாக ஒரு அலுவலகம் அமைத்து அங்கேயே தங்க போவதாகவும் ஜெயம் ரவியை பற்றிய செய்தி வெளியானது. திடீரென ஜெயம் ரவி மும்பைக்கு போக காரணம் என்ன என்ற கோணத்திலும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். ஒருவேளை அவர் ஹிந்தியில் படத்தில் நடிக்கப் போகிறாரா என்றும் கூறி வருகிறார்கள்.

இதற்கிடையில் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜெயம் ரவி இளைஞர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி இருந்தார். அதாவது வீட்டில் இருக்கும் வரை சந்தோஷ் சுப்பிரமணியனாகத்தான் இருப்பேன். அதே கல்லூரிக்கு வந்தால் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் மாதிரி ஆகி விடுவேன் என்று கூறினார்.

அதனால் நமக்கு இருக்கிற லைப் ஒன்றே ஒன்றுதான். அந்த லைப்பை வாழும் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என ரசிகர்களுக்கு அவருடைய அறிவுரைகளை வழங்கினார் ஜெயம் ரவி.

விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு ஜெயம் ரவி மிகவும் சந்தோஷமாக தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாதிரி எல்லாம் பேசிக்கொண்டு வருகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் முன்பு இருந்ததைவிட இந்த பிரச்சனைக்கு பிறகு அவருடைய தோற்றத்திலும் சரி முகத்திலும் சரி ஒரு வித மாற்றத்தை நம்மால் காண முடிகிறது.

Next Story