யார் சொன்னா டிராப்னு! ‘வாடிவாசல்’ எதுக்காக வெயிட்டிங் தெரியுமா? மேலிடமே சொல்லிருச்சே

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இன்று அவருடைய 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். சூர்யாவின் ரசிகர்களும் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். ஆங்காங்கே இருக்கும் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரத்ததானம் செய்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாடல் ஒரு பக்கம் சாமி பாடல் மாதிரி என விமர்சனம் வந்தாலும் இதுவரை சூர்யாவை இப்படி ஒரு ஆங்கிளில் பார்த்ததில்லை என்று ரசிகர்கள் பிரமித்து வருகிறார்கள். அந்தளவுக்கு கங்குவா படத்தில் நடிப்புக்கு தீனி போட்ட மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூர்யா.

இன்னொரு பக்கம் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவருடைய 44வது படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜாஹெக்டே நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்தது புற நானூறு மற்றும் வாடிவாசல்.

இதில் புற நானூறு திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகினார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் உறுதியாகியுள்ளது. இன்னொரு பக்கம் வாடிவாசல் திரைப்படமும் கிடப்பிலேயே போடப்பட்டதாக சொல்லப்பட்டது.

இதை பற்றி சமீபத்தில் கலைப்புலி தாணு கூறியதாவது. வாடிவாசல் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் மூன்று நாள்கள் படப்பிடிப்பு நடந்ததாக கூறியிருந்தார். அதன் பிறகு சில ஆபத்துக்களை சந்திக்க நேர்ந்தது என்றும் அதை சமாளிக்க எங்களிடம் போதுமான அந்த விஷயம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் விடுதலை படத்தில் வெற்றிமாறனும் பிஸியாக இருப்பதால் நான் சொன்ன விஷயம் தயார் ஆனதும் விடுதலை படத்திற்கு பிறகு கண்டிப்பாக வாடிவாசல் தொடங்கும் என்றும் அதோடு இன்னும் சில சர்ப்ரைஸ்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Next Story