ஏஐ மூலம் புதிய அவதாரம் எடுக்கப் போகும் கமல்! இப்படி ஒரு ப்ளானா?
களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் 1960 ஆம் ஆண்டு இந்த சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் உலக நாயகனும் நடிகருமான கமல்ஹாசன். இந்த படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி ஆகியோர் நடிக்க இவர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமானார்.
அதிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 64 வருடங்கள் ஆகிவிட்டன. இத்தனை வருட காலங்களில் பல சிறந்த படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற்றிருக்கிறார் கமல். இன்னும் அவர் 100 ஆண்டுகள் இந்த சினிமாவில் பயணிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக பார்க்கப்படுகிறது.
தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராகவும் கமல் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எந்த ஒரு தொழில்நுட்பம் வந்தாலும் அதை அறிமுகப்படுத்திய பெருமை கமலை மட்டுமே சாரும் .ஆரம்பத்தில் ஃபிலிம் பயன்படுத்தி தான் படங்களை எடுத்து வந்தனர்.
அதை டிஜிட்டலாக மாற்றிய பெருமை கமலுக்கு தான் சேரும். அந்த வகையில் எல்லா சாதனைகளுக்கும் ஒரு முன்னோடியாக கமல் இருந்து வருகிறார். தற்போது கூட பல இளைஞர்களை கவர்ந்த தொழில்நுட்பமாக பார்க்கப்படுவது ஏஐ தொழில்நுட்பம். இதைப் படிப்பதற்கு கமல் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்.
திடீரென ஏஐ தொழில்நுட்பத்தை அவர் படிப்பதற்கு காரணம் என்ன? ஒரு வேளை மருதநாயகம் படத்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப் போகிறாரா என்ற ஒரு சந்தேகமும் இருந்து வந்தது. ஆனால் உண்மையில் மருதநாயகம் படத்திற்காக அவர் அந்த தொழில்நுட்பத்தை படிக்க போகவில்லையாம்.
அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு ஏஐ மூலம் பல புதிய திட்டங்களை கொண்டு வருவதற்காகவே அந்த தொழில்நுட்பத்தை படிக்க போயிருக்கிறார் என்று தற்போது வந்த தகவல் தெரிவிக்கிறது. என்ன இருந்தாலும் அந்த தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு ஒரு நல்லது நடந்தால் சரிதான். மேலும் அது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.