பணமும் வேண்டான்னு சொன்னதோடு சிம்புவுக்கு பரிசும் கொடுத்த கமல்!.. அப்படி என்ன பாசமோ!...

by ராம் சுதன் |

சினிமாவில் தொழிலை தாண்டி சிலரிடம் மட்டுமே நட்பு இருக்கும். பலரிடம் மேலோட்டமாக பழகினாலும் சிலர் மட்டுமே மனதுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டுமெனில் பாசாங்கு இல்லாத, எதையும் எதிர்பார்க்காத அன்பு இருக்க வேண்டும்.

கேமரா முன்பு நடித்தாலும் நிஜ வாழ்வில் நடிக்காமல் இருக்க வேண்டும். உண்மையாக பழக வேண்டும். சினிமா உலகில் இதெல்லாம் மிகவும் அபூர்வம். ரஜினிகாந்த் இவ்வளவு சூப்பர்ஸ்டாராக இருந்தும் கூட கமல் என்றால் அவ்வளவு அன்பும் மரியாதையும் காட்டுவார். ஏனெனில் ரஜினியின் ஆரம்பகால வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த கமல்தான்.

ரஜினி ரசிகர்களுக்குதான் கமலை பிடிக்காதே தவிர ரஜினிக்கு எப்போதும் மிகவும் பிடித்த நடிகராக இருப்பவர் கமல்தான். அதேபோல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என எல்லோருமே கமலிடம் அன்பாக பழகுவார்கள். விக்ரம் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்ததற்காக சூர்யா சம்பளம் கூட வாங்கவில்லை.

அதேபோல் கமலின் மீது கொண்ட அன்பால் ஹே ராம் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் சம்பளமே வாங்கவில்லை. இப்போது கமலின் அன்பு பட்டியலில் சிம்புவும் இணைந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இனிமேல் நான் சினிமாவில் நடிக்க போவதில்லை என கமல் அறிவித்தபோது அவரின் வீடு தேடி சென்ற சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கமலை கட்டிப்பிடித்துக்கொண்டு ‘நீங்கள் சினிமாவில் நடிப்பதை நிறுத்தக்கூடாது’ என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

கமல் மீது அதே அன்பு சிம்புவுக்கும் இருக்கிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 250 கோடி பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்ட படம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஓடிடி சேனல்கள் அதிக விலைக்கு புதிய படங்களை வாங்குவதை நிறுத்திவிட்டதால் கமல் தயங்கினார். இதை புரிந்துகொண்ட சிம்பு ‘இந்த படத்தை நானே தயாரிக்கிறேன்’ என சொல்லி கமலிடம் அனுமதியும் வாங்கினார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக கமல் சிம்புவுக்கு சில கோடிகள் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். அதற்கு பதில் ராஜ்கமல் தயாரிக்கும் தக் லைப் படத்தில் நடித்தார் சிம்பு. ஆனாலும், கமலுக்கு ஒன்றரை கோடியை சிம்பு திரும்பி கொடுக்கவேண்டும் என்கிற நிலையில் அதை வேண்டாம் என சொல்லிவிட்டாராம் கமல். மேலும், ஒரு அழகான ஜெர்க்கினை சிம்புவுக்கு பரிசாக கமல் கொடுத்திருக்கிறாராம்.

Next Story