பட் அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!.. எஸ்.கே. பற்றி உலக நாயகன் சொல்றத பாருங்க!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:35  )

Amaran movie: நடிகர் கமல்ஹாசன் பல வருடங்களாகவே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பெரும்பாலும் அந்த படங்களில் அவரே ஹீரோவாக நடிப்பார். சில சமயம் மற்ற நடிகர்களை வைத்தும் படங்களை தயாரிப்பார். விக்ரம் பட ஹிட்டுக்கு பின் மீண்டும் தயாரிப்பில் பிஸி ஆகிவிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு சிம்புவை வைத்து ஒரு படத்தை துவங்கினார். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. ஆனால், பட அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அந்த படம் நகரவில்லை.

அதற்கு காரணம் அப்படத்தின் பட்ஜெட் அதிகம். அதோடு, ஓடிடி நிறுவனங்கள் அதிக விலை கொடுக்காததால் படம் நிறுத்தப்பட்டது. ஒருபக்கம், சிவகார்த்திகேயனை வைத்து அமரன் என்கிற படத்தை துவங்கினார் கமல், இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்து போன மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதை. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்ப்பார்கள் என சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு ராணுவ மேஜராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாராம். இந்த படத்தின் டீசர் வீடியோவும் ஏற்கனவே வெளியாக கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் கமல், சிவகார்த்திகேயன், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சாய் பல்லவி, மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ‘ என்னுடைய படங்களை கமல் சார் பார்த்திருப்பாரா தெரியவில்லை. ஆனால், இந்த படத்தை பார்ப்பார்’ என சொன்னார்.

மேலும், ‘ஒரு தயாரிப்பாளராக கமல் சார் என்னிடம் எதுவும் சொல்லவில்லை’ எனவும் சொல்லி இருந்தார். இதற்கு பதில் சொன்ன கமல் ‘என்னிடம் எதுவுமே சொல்லவில்லை என சிவகார்த்திகேயன் சொன்னார். சில பேரின் கண்களை பார்த்தாலே அவர்களின் நேர்மை தெரியும். அது சிவகார்த்திகேயனிடம் எனக்கு தெரிந்தது. இந்த படத்தை உங்கள் படம் போல் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு நான் ஒதுங்கிக்கொண்டேன்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story