Thuglife: விண்வெளி நாயகா விடியல் நீதான்!... மாஸ்டர் பீஸாக ரெடியான தக் லைஃப்... ரிலீஸ் தேதியுடன் வெளியான டீசர்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 11:39:45  )
Thuglife: விண்வெளி நாயகா விடியல் நீதான்!... மாஸ்டர் பீஸாக ரெடியான தக் லைஃப்... ரிலீஸ் தேதியுடன் வெளியான டீசர்!...
X

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் கமலஹாசன் இன்று தன்னுடைய 70 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் சிறு வயது பையனாக நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கிய கமலஹாசன் தற்போது வரை இந்திய சினிமாவே வியக்கும் ஒரு கலைஞனாக மாறி இருக்கின்றார்.

சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாமல் அனைத்து ஜானரிலும் புகுந்து விளையாடி உலக விஷயங்கள் அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்திருப்பவர் நடிகர் கமலஹாசன். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர், நடன கலைஞர்கள், சண்டை பயிற்சியாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக தன்னை மாற்றி இருக்கின்றார்.

அறிவு வளர்வதற்கு கல்வி முக்கியம் தான். ஆனால் பள்ளிப்படிப்பை சரியாக முடிக்காத கமலஹாசன் சினிமாவில் பல படிப்புகளை முடித்திருக்கின்றார். சினிமா துறையில் இவருக்கு தெரியாத விஷயமே கிடையாது. அந்த அளவிற்கு அனைத்தையும் கரைத்துக் குடித்து வைத்திருக்கின்றார். கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வம் இன்னும் குறையாத நிலையில் ஏஐ டெக்னாலஜியை குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கின்றார்.

233 திரைப்படங்களில் நடித்திருக்கும் கமலஹாசன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கி இருந்தார். இருப்பினும் அவர் சினிமாவை விட்டாலும் சினிமா அவரை விடாது என்ற வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் கமலஹாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அடுத்ததாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். ஏற்கனவே மணிரத்னம் கமலஹாசன் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படம் இன்றளவும் கிளாசிக் ஹிட்டாக இருந்து வரும் நிலையில் தக் லைஃப் திரைப்படமும் அப்படி ஒரு படமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது படக்குழுவினர் படம் வெளியாகும் தேதியை டீசராக வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் இடம்பெற்றிருக்கும் கமலஹாசனின் காட்சிகள் மாஸாக இருக்கின்றது. படம் வருகிற ஜூன் மாதம் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக அதில் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த டீசரில் கமலஹாசனின் வித்தியாசமான கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Next Story