என்ன பார்த்தா எப்படி இருக்கு?! டிவி நிர்வாகத்திடம் எகிறிய கமல்ஹாசன்… பிக்பாஸ் விலகலுக்கு இதான் காரணமா?

by ராம் சுதன் |

பிக்பாஸ் தமிழ் சீசனை தொகுத்து வழங்கியதில் இருந்து கமல்ஹாசன் திடீரென விலகியதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒரு வீட்டுக்குள் 100 கேமராக்கள் சூழ 16 பிரபலங்கள் 100 நாட்கள் வாழ வேண்டும். இது தமிழ் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதனால் முதல் சீசன் களைக்கட்டியது. அதிலும் ஓவியாவுக்கு இருந்த ரசிகர் கூட்டம் பெரிய அளவில் கூடியது.

ஆர்மி ஆரம்பித்து ஓவியாவை கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அதிலும் அவர் திடீர் வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அந்த சம்பவத்தில் கமல்ஹாசனின் தக் லைஃப் ரிப்ளேக்கள் ரசிகர்களிடம் அப்ளாஸ் குவித்தது. அடுத்தடுத்த சீசன்களிலுமே கமல்ஹாசனின் ஆங்கரிங்கை பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது.

பெரும்பாலும் அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எதுவும் வரவில்லை. ஆனால் கடந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து பிரதீப் ஆண்டனிக்கு எதிராக போர் கொடி எழுப்பினர். எப்போதுமே மக்கள் தீர்ப்பை முன்னிலையாக எடுக்கும் கமல்ஹாசன் இந்த சம்பவத்தில் போட்டியாளர்களின் முடிவுக்கு சென்றார்.

பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். இது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. போட்டியாளர்களை தாண்டி கமல்ஹாசனை கூட ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினர். தக் லைஃப் படத்தின் அறிமுக போஸ்ட்டில் கூட பிரதீப் ஆண்டனிக்காக நீதி கேட்டனர். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனே பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டார்.

இது அவரை பெரிதும் பாதித்தது. பிக்பாஸ் எண்ட்ரியே தன்னுடைய புகழை அதிகரித்து கொள்ள தான். அந்த வேளையில், இது இருக்கும் புகழையே சரிச்சு விட்ருமே என்ற ரீதியில் அவர் யோசித்து எடுத்த முடிவு தானாம் இது. ஏனெனில், தேர்தல் சமயங்களில் கூட பிஸியாக தொகுத்து வந்தவர். சினிமாவை காரணம் காட்டி பிக்பாஸில் இருந்து விலகுவது எல்லாம் நம்பும்படியாக இல்லை எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் தற்போது ஒரு புது நடிகரை தொகுத்து வழங்க உள்ளே அழைத்து வரும்போது அவரால் கமல் அளவுக்கு தமிழில் பேசி வென்று விட முடியாது. அப்போது ரசிகர்கள் கமலை மிஸ் பண்ண நேரிடும். அதுவும் ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story