Surya: லூசுத்தனமா கேள்வி கேட்ட இப்படித்தான்… சிரிச்சிக்கிட்டே மூக்கை உடைத்த சூர்யா? இத கேளுங்க..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:48  )

Kanguva: இந்தியா முழுவதும் கங்குவா படம் பிரமோஷன் இருக்கு சூர்யா மும்முரமாக கலந்து கொண்டு வரும் நிலையில், செய்தியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு சிரிக்காமல் மூக்கை உடைத்த சம்பவம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்பட்டு உள்ளது.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைப்பு செய்திருக்கிறார். இரண்டு வேடங்களில் சூர்யா நடித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு படம் அறிவிக்கப்பட்டாலும் 2022 ஆம் ஆண்டில் தான் இதன் சூட்டிங் தொடங்கியது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி இருக்கும் இப்படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸால் தற்போது திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பல மாற்றங்களை கடந்து தற்போது கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. திரைப்படம் தமிழகத்தில் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் வட இந்தியாவில் 3500 ஸ்கிரீன்கள் வரையிலும் வெளியிடப்பட இருக்கிறது.

கர்நாடகாவில் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. அதிகபட்சமாக 10,000 திரையரங்குகளில் கங்குவா வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு வருகிறார். அந்த சமயத்தில் கர்நாடகாவில் பிரஸ்மீட்டில் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம், இங்கு கங்குவா திரைப்படம் 1000 திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதே போல பைரதி ரனகல் தமிழகத்தில் வெளியாகுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சூர்யா, நான் உண்மையில் அப்படத்திற்கு விநியோகிஸ்தர் எல்லாம் இல்லை. அப்படி நான் ஒரு பகுதியாக இருந்தால், எந்த எல்லைக்கும் சென்று, என் சக்தியால் எந்த கதவையும் தட்டி அதை செய்வேன் என தெரிவித்து இருக்கிறார். பைரதி ரனகல் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி கங்குவா சமயத்தில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story