மழுப்புறத பாத்தா சந்தேகமா இருக்கே… கேஜிஎஃப்பில் களமிறங்கிறாரே அஜித்?..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:53  )

KGF: பேன் இந்தியா திரைப்படங்களில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் இன்னும் வரவேற்பை பெற்று வரும் கேஜிஎப் திரைப்படத்தில் தமிழ் சூப்பர் ஹீரோவான அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

கன்னட மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படம் கேஜிஎப். திரைப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்க யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு புத்தகத்தின் கதையை எழுத்தாளர் டிவி தொகுப்பாளருடன் சொல்வது போல இந்த கதை அமைக்கப்பட்டு இருந்தது.

முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஒரே படத்தில் யாஷின் லெவல் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. முதல் பாகம் கன்னடா சினிமாவில் மிகப்பெரிய அளவில் வசூல் குவித்தது. இதை தொடர்ந்து நான்கு வருடம் கழித்து கேஜிஎஃப் 2 வெளியானது.

முதல் பாகத்தில் முதல் நாள் வசூலே பல சாதனைகளை குவித்தது. 500 மற்றும் 1000 கோடியை வசூல் செய்த முதல் கன்னடா படமாக கேஜிஎஃப்2 மாறியது. இப்படத்தில் யாஷ், ரவீனா, ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் உலகளவில் 10 ஆயிரம் திரையரங்கிலும், இந்தியா முழுவதும் 6000 தியேட்டரிலும் வெளியானது. சிறந்த கன்னடா திரைப்படம் மற்றும் சண்டை காட்சிகளுக்கான தேசிய விருது இப்படத்துக்கு கொடுக்கப்பட்டது. இப்படத்தின் கிளைமேக்ஸில் கேஜிஎஃப் 3க்கு ஹிண்ட் கொடுக்கப்பட்டது.

இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த சில காட்சிகள் பேசப்பட்டதாக யாஷ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மூன்றாம் பாகம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரசாந்த் நீல் மற்றும் அஜித் இருவரும் சந்தித்து இருந்தனர்.

இது குறித்து தகவல்கள் வெளியில் கசிந்த நிலையில் தற்போது அஜித் கேஜிஎப் மூன்றாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்து மூன்று பாகங்களிலும் நடித்து வரும் மாளவிகா மேகனிடம் கேட்டபோது எனக்கு தெரியாது. இயக்குனர் எண் தருகிறேன். கேட்டுக்கொள்ளுங்கள் என்றாராம்.

Next Story