கோலிவுட்டின் அடுத்த விவாகரத்து… ரஜினிகாந்தின் மாஸ்ஹிட் நாயகி கணவரை பிரிந்தாரா?
Kollywood: தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விவாகரத்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரபல நடிகை அவருடைய கணவரை பிரிந்து இருப்பதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது.
கோலிவுட்டில் தொடர்ச்சியாக பிரபலங்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமந்தா தொடங்கி தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி என பிரபலங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையில் பிரிந்து கொள்வதாக அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். நாயகியாக இவர் கலக்கியதை விட குணச்சித்திர வேடத்தில் இவர் காட்டிய நடிப்பு பலரை பிரமிக்க வைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் பிரம்மாண்டமாக நடித்து வந்தார்.
இதில் படையப்பா திரைப்படத்தின் நீலாம்பரி கேரக்டரும், பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி கேரக்டரும் ரம்யா கிருஷ்ணனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அவருடைய கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்படி தன்னுடைய துறை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1998 ஆம் ஆண்டு சந்திரலேகா திரைப்படத்தில் நாகர்ஜூனாவுடன் இணைந்து நடித்தார் ரம்யா கிருஷ்ணன். அப்போதிலிருந்தே வம்சியுடன் காதலில் வயப்பட்டார்.
இதைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவங்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் இருவரின் திருமண வாழ்க்கை குறித்து பல தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.
அதில் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் ரம்யா கிருஷ்ணனும், ஹைதராபாத்தில் வம்சியும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து வம்சி கூறும்போது, நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. எங்களுடைய வேலை காரணமாகவே தனித்தனியாக வசித்து வருகிறோம்.
இதை விவாகரத்து என கூறுவது வருத்தமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நல்ல மனைவி மற்றும் நல்ல அம்மா அவரை இதுபோல் சொல்லாதீர்கள் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார். முதல் முறையாக கிசுகிசுப்புகளை தாண்டி ஒரு பிரபலம் பிரியவில்லை என அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.