ரஜினியால் விஜய் படம் இயக்கும் வாய்ப்பு போயிடுச்சி!.. புலம்பும் கே.எஸ்.ரவிக்குமார்....

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:29  )

Rajini vijay: 90களில் ரசிகர்களிடம் பிரபலமானவர் கே.எஸ்.ரவிக்குமார். விக்ரமின் உதவியாளரான இவர் புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன்பின் சேரன் பாண்டியன் படம் மூலம் பிரபலமானார். இவரின் படங்களில் ஹீரோ ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவராகவே இருப்பார். பெரும்பாலும் சரத்குமாரே அந்த வேடத்தில் நடிப்பார்.

இவர் இயக்கிய நாட்டாமை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அப்படி உருவான திரைப்படம்தான் முத்து. இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே படையப்பா படத்திலும் இருவரும் இணைந்தனர். ரஜினி சினிமா கேரியரில் இது முக்கிய படமாக அமைந்தது.

அதன்பின் லிங்கா படத்தில் இருவரும் இணைந்தனர். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் ராணா என்கிற படம் உருவானது. ஆனால், படப்பிடிப்பில் இருக்கும்போது ரஜினி மயங்கி விழுந்தார். அதன்பின்னர் அவரை சிங்கப்பூருக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

சில மாதங்கள் அங்கு சிகிச்சை பெற்று திரும்பினார் ரஜினி. மேலும், ராணா படம் டேக் ஆப் ஆகவில்லை. ஆனாலும், ரஜினியின் குட் புக்கில் கே.எஸ்.ரவிக்குமார் எப்போதும் இருந்தார். ரஜினி பட கதை விவாதங்களில் அவர் கலந்து கொள்வார். ரஜினி, சரத்குமார் மட்டுமில்லாமல் கமலை வைத்து 5 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

மேலும், விஜயை வைத்து மின்சார கண்ணா, அஜித்தை வைத்து வரலாறு மற்றும் வில்லன் ஆகிய படங்களை இயக்கினார். இப்போது சினிமாவில் முழுநேர நடிகராக மாறிவிட்டார். இந்நிலையில், ஊடகமொன்றில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோனதாக சொல்லி இருக்கிறார்.

ராணா படம் நடக்கும்போது ரஜினி சார் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் இருந்தார். அவர் எப்போது சிகிச்சை முடிந்து திரும்புவார் என தெரியவில்லை. அப்போதுதான் விஜயை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ரஜினி மருத்துவமனையில் இருக்கும்போது அவருக்காக காத்திருக்காமல் இவன் காசுக்கு ஆசைப்பட்டு வேறு ஹீரோவை வைத்து படமெடுக்க போய்விட்டான் என பேசுவார்கள் என்பதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story