கமல் நடிக்கலனா நான் நடிக்கிறேன்!.. ரஜினி சொன்ன அந்த கதையை ஆட்டைய போட்ட அஜித்!..
Kamal Rajini: எல்லா திரைப்படங்களிலும் ஒரு கதையிலிருந்தே உருவாகும். இயக்குனர் பல மாதங்கள் யோசித்து, மூளையை கசக்கி ஒரு கதையை உருவாக்குவார். சில சமயம் அந்த அவர் சொல்லும் ஹீரோக்களுக்கு பிடிக்காது. எனவே, இயக்குனர் வேறு கதையை உருவாக்குவார்.
சில சமயம் ஒரு ஹீரோவை மனைதில் நினைத்துகொண்டே இயக்குனர் கதையை எழுதுவார். ஆனால், அந்த ஹீரோ அந்த படத்தில் நடிப்பார் என சொல்ல முடியாது. 96 பட இயக்குனர் பிரேம் குமார் மெய்யழகன் பட கதையை எழுதும்போது கார்த்தி வேடத்தில் ரஜினியையும், அரவிந்த்சாமி வேடத்தில் கமலையும் மனதில் நினைத்தே எழுதியிருக்கிறார்.
சொன்னால் நம்ப முடிகிறதா?.. ஆனால் இதுதான் உண்மை. இதை அவரே பேட்டியில் சொல்லி இருக்கிறார். எந்த கதை எந்த ஹீரோவிடம் போகும் என சொல்லவே முடியாது. ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில் கமலும், அஜித்துக்கு சொன்ன கதையில் சூர்யாவும், விஜய்க்கு சொல்லப்பட்ட கதையில் விக்ரமும் நடித்திருக்கிறார்கள்.
அதற்கு பல காரணங்கள் இருக்கும். ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர் இயக்குனார் கே.எஸ்.ரவிக்குமார். இருவரும் இணைந்து முத்து, படையப்பா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். மேலும், லிங்கா படத்திலும் இருவரும் இணைந்தனர். ஆனால், அந்த படம் ஓடவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பேட்டியில் ‘வரலாறு பட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது ரஜினி சார் என்னிடம் ‘அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்கப் போறீங்களாமே.. எனக்கு தெரியாமல் அது என்ன கதை?’ எனக் கேட்டார். முன்ன ‘மதனா’ என ஒரு கதை பண்ணோம் இல்லையா. அதுதான் சார்’ என சொன்னேன்.
15 நிமிடங்கள் அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. ‘இந்த கதையை கமலிடம் சொல்லுங்கள் அவர் பண்ணவில்லை என்றால் நான் நடிக்கிறேன்’ என 3 வருடங்களுக்கு முன்பு அவர் சொன்னது எனக்கு மறந்தே போய்விட்டது. அந்த கதையில்தான் அஜித்தை 3 வேடத்தில் நடிக்க வைத்து வரலாறு படமாக எடுத்தேன்’ என சொல்லி இருக்கிறார்.